2 எந்த ஒரு காரியத்திற்கும் தேவனால் அருளப்பட்ட ஒரே ஒரு வழிதான் இருக்கிறது There is only one way Provided By God for anything Chicago illnois. USA மொழியாக்கம் சகோ; P.அலெக்ஸ் 1.மாலை வணக்கம் நண்பர்களே. சகோதரர் கார்ல்சன் (Brother Carlson] அவர்களே நன்றி. நன்றி. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவரை தொழுது கொள்ள இங்கே நாம் இருந்து கொண்டிருக்கிறோம், உட்காருவதற்கு முன்பு நாம் சற்று அந்த மகத்தான இராஜாவினிடத்தில் பேசுவோமாக. 2. எங்கள் பரலோகப் பிதாவே, மீண்டுமாக இந்த சிகாகோ நகரத்தில் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக ஒன்றாக இங்கே கூடி வந்திருக்கும் இந்த தருணத்திற்காக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். பிதாவே, ஆண்கள் மற்றும் பெண்கள், பையன்கள், சிறுமிகள் ஒரு எழுப்புதலை அல்லது அசைவாடுதலைக் காணும்படியாக எங்கள் முயற்சிகள் முன் வைக்கப்பட்டிருக்கிறது, இந்த நகரத்தில் விடுபட்டிருக்கிற இன்னும் அதிகமான சிலரையும்கூட அழைப்பதற்காக இருக்கலாம். அதற்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த நாட்டை நியாயத்தீர்ப்பானது தாக்குவதற்கு முன்பு அந்த கடைசி நபர் உள்ளே அழைக்கப்படும் ஒரு மகத்தான தருணமாக அது இருக்கட்டும். பிதாவே, இன்னுமாக நிறையப் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பிதாவே இந்த நேரத்தில் அவர்களை உள்ளே அனுப்புவீராக அவர்கள் கிறிஸ்துவை பெற்றுக் கொள்ளும்படியாக அதை அருள்வீராக, மேலும் நிகழவிருக்கும் அந்த மகத்தான எடுத்துக் கொள்ளப்படுதலில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுடன் அவர்களும் எடுத்துக் கொள்ளப் படுவார்களாக. கர்த்தாவே இதை அருள்வீராக. 3. நாங்கள் முன்வைத்துள்ள இந்த முயற்சிகளை, எங்கள் சகோதரர் கார்ல்சன் மற்றும் இங்குள்ள அனைவரும் முன்வைத்துள்ளனர், மதுபானம் மற்றும் குத்துச் சண்டை அரங்கமாக இருந்த இந்த இடத்தை அவர்கள் தேவனுடைய வீடாக மாற்றியுள்ளனர், பிதாவே, இது பாவிகளை கிறிஸ்துவிடம் மாற்றும் ஒரு நினைவுச் சின்னமாகவும், பிரதிநிதித்துவமாகவும் இருக்கட்டும். 4. பிதாவே, இந்தக் காரியங்களில், வியாதியஸ்தர்களை குணப்படுத்தி, நாங்கள் கேட்டுக் கொண்ட மகத்தான இந்த காரியங்களுக்கு நீர் செவிசாய்ப்பீராக, இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய மகிமைக்காகவும், கனத்திற்காகவும் நாங்கள் கேட்கிறோம். ஆமென். நன்றி நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். 5. சிகாகோ நகரத்திற்கு வருவது எப்பொழுதுமே ஒரு சிலாக்கியாக இருக்கிறது. நான் எப்பொழுதும் அதை அப்படித்தான் உணர்கிறேன். சில நேரங்களில் இங்கே நான் இருப்பதில்லை. ஏனென்றால் இனிமேல் அதிகமாக இங்கே நான் இருப்பதில்லை நான் டுசான்-ல் உள்ள அரிசோனாவில் வசித்து வருகிறேன் மேலும் கோடை விடுமுறையில் இங்கே ஜெபர்சன்- வில்-ல் இருப்போம். திங்கள் கிழமை காலை நான் இங்கிருந்து புறப்படுகிறேன். ஆகவே நான் வீட்டை அடைந்தவுடன் மீண்டும் டுசான்க்கு திரும்பும்படி நிறைய காரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. 6. ஆனால் நான் இங்கே ஒலி நாடாக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன், செய்திகளை ஒலி நாடாக்கள் வழியாக அனுப்புகிறேன். கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து வருகிறார். ஞாயிறன்று நாங்கள் ஒரு நான்கு மணி நேர செய்தியைக் கொண்டிருந்தோம். இங்கே நான் அதைச் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்பிருந்து தேவனால் மறைக்கப்பட்டிருந்த அந்த இரகசியமானது இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்பாடனது அந்த நான்கு மணி மணி நேர செய்தியில் மூன்று மடங்காக இருந்தது. ஆகவே நிச்சயமாகவே தேவன் நம்மை ஆசீர்வதித்தார், மகத்தான ஆசீர்வாதங்கைள உடையவர்களாக இருந்தோம். மேலும் நம் மத்தியில் உள்ள வியாதியஸ்தர்களை தேவன் சுகப்படுத்தினார். 7. ஒரு சில ... மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு ஆங்கிலேயன். அவருடைய மனைவி நார்வே-யைச் சேர்ந்தவர். அவள் மிகவும் ஒரு அருமையான செவிலியராக (Nurse) இருந்தாள், மேலும் அவர் ஒரு அருமையான மனிதாக இருந்தார். ஆகவே, நான் சிக்கலான ஒன்றை பேசிக்கொண்டிருந்தேன். மேலும் நான் அதைக் கூறின போது அந்த மனிதன் ஒரு வகையான வெறுப்புடன் இருந்து கொண்டிருந்தார். மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவரை முதன் முதலாக சந்தித்த போது அவருடைய இருதயத்தில் ஒரு வித துடிப்பு இருப்பதாக கூறினேன். அதை நம்புவதற்கு அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன், பிறகு மருத்துவர் அவருடைய இருதயத்தில் ஒரு விதத்துடிப்பு இருப்பதாக கூறினார். அன்று காலை அவர் சற்று மனம் உடைந்து போனவனராகக் காணப்பட்டார். நான் அதைக் கூறின போது கோபமடைந்தார், மேலும் உடனே தரையில் கீழே விழுந்து இறந்து போனார். அவனுடைய மனைவி அவனைப் பரிசோதித்துப் பார்க்கக் கீழே வந்தாள், அவர் போய்விட்டார். 8. நான் பார்வையாளர்களை அமைதிப்படுத்த வேண்டியதாகி விட்டது. பின்னர் மேடையிலிருந்து இறங்கி அவர் இருந்த இடத்திற்குச் சென்று அவரது நாடித்துடிப்பைப் பார்த்தேன். நாடித்துடிப்பு இல்லை. அவரது கண்கள் உங்களுக்குத் தெரியும். இதயம் நின்றுவிடும் போது கண்களானது பின்னோக்கி போய்க் கொண்டிருக்கும். ஆகவே அவனுடைய கண்கள் பின்னோக்கி சென்றது, அப்படி ஒரு நிலையில் இருந்தார் அவர் போய்விட்டார் என்று தெரிந்தது. மேலும் கர்த்தராகிய இயேசு “பேசு” என்று கூறினார். நான் “கர்த்தராகிய இயேசுவே அவருடைய ஜீவனை மீண்டும் அவருக்கு தாரும்" என்றேன். உடனே என்னை நோக்கிப் பார்த்து “சகோதரர் பிரான்ஹாம்” என்றார். 9. இன்றிரவு அவர் உயிருடன் இருக்கிறார். நிச்சயமாக இந்தக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பார். இப்படிப்பட்ட கூட்டங்களில் நிச்சயமாக அவர் ஆஜராகி விடுவார். இங்கே இன்றிரவு அவரை நான் பார்க்க முடியவில்லை. மிஸ்டர் வே (Mr Way) நீங்கள் இங்கு இருக்கிறீர்களா? எனக்கு தெரியவில்லை....ஏன் இதோ எனக்கு நேராக வலதுபுறத்தில் இருந்து கொண்டிருக்கிறார் ஆமாம், ஆமாம் சரியாக எனக்கு முன்பாக இருக்கிறார். நான் அதை அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர் இன்றிரவு மிக நல்ல தேக ஆரோக்கியத்துடன் இங்கே இருக்கிறார். தேவன் மரித்துப் போன ஒருவரை உயிருடன் எழும்பச் செய்ததை ஜனங்கள் காணும்படியாக சற்று நீங்கள் எழுந்து நிற்பீர்களா? அவருடைய மனைவி ஒரு அருமையான நார்வே செவிலியார் ஆவார். தேவனுக்கு துதி உண்டாவதாக. 10. உங்களுடைய அன்பான மனைவி உங்களுடன் வந்திருக்கி றார்களா? (“இல்லை அவர் வியாதியஸ்தர்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்" சகோதரர் பிரான்ஹாம் அவர்களே என்று சகோதரர் வே கூறுகிறார்] அவள் பிணியாளிகளைக் கவனிக்கச் சென்று விட்டாள். அவருடைய மனைவி ஒரு அன்பானவர். அவர் வியாதியஸ்தர் மேல் அக்கறை கொண்ட ஒருவராக இருக்கிறார். அது அவருடைய இருதயத்தில் இருக்கிறது. தொடர்ந்து சேவை செய்து வருகிறாள். இப்பொழுதும் அவள் பின்னால் உள்ள சில வியாதியஸ்தர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறாள். ஆகவே நாங்கள் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 11. இப்பொழுது நான் உள்ளே வந்து கொண்டிருக்கும் பொழுது சற்று முன்பு சகோதரர் வேயில் (Brother vayle) அவர்கள் பேசிக் கொண்டி ருந்ததைக் கேட்டேன். ஒவ்வொரு இரவும் முடிந்தவரை சீக்கிரமாக வெளியில் வர முயற்சிப்பேன். தேவனுடைய வழிநடத்துதலில் மட்டுமே நான் வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் ஏறெடுப்பேன். மேலும் சகோதரன் கார்ல்ஸ்சன் மற்றும் சிகாகோவில் கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் அவருடைய அனைத்து குழுவினரையும் ஆசீர்வதிக்கும்படி தேவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 12. இந்த வாரத்தில் சிறிது நேரம் கழித்து இன்று காலை விடியற் காலைக்குப் பிறகு நான் கண்ட ஒரு தரிசனத்தை உங்களுக்கு சொல்லக்கூடும், சற்று இங்கு வரத்துவங்கிய பொழுதுதான் இதை சிந்தித்துக் கொண்டிருந்தேன். கர்த்தருக்கு சித்தமானால் எனக்கு இந்த வாரத்தில் இன்னும் சிறிது நேரம் கிடைக்கும் போது அதைக் கூறுவேன். 13. இப்பொழுது இதற்கு முன்னால் ஒரு கூட்டத்திலும் கூட கலந்து கொள்ளாதவர்கள் இங்கே எத்தனை பேர் இருக்கிறீர்கள், உங்கள் கரங்களை நான் காணட்டும், ஒரு கூட்டங்களில் கூட கலந்து கொள்ளாதவர்கள் நல்லது சரி, இன்றிரவு இங்கே இந்த சிறிய கூடாரத்தில் நீங்கள் இருப்பதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த அரங்கமானது ஒரு சமயம் மல்யுத்தம் (அப்படி இல்லையா?) அல்லது குத்துச்சண்டை இது போன்றவைகள் நடத்துகிற இடமாக பயன்படுத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன். (அது அப்படி இல்லையா?) 14. நான் சமீபத்தில் இந்தியானா மாகாணத்தில் உள்ள வின்சென்ஸ் (Vincenness) என்ற இடத்திற்கு சிறு பையனாக இருக்கும் போது குத்துச்சண்டை விளையாடச் சென்ற அந்த இடத்தில் பிரசங்கித்தாக எனக்கு நினைவு இருக்கிறது. பின்னர் நான் சிறுவனாக இருந்த போது தொழில் முறை குத்துச் சண்டைப் போட்டிகளில் போராட வேண்டியிருந்தது அதில் பதினைந்து தொடர்ச்சியான தொழில் முறை சண்டைகளில் ஜெயித்தேன், மேலும் ஒன்றில் தோற்று விட்டேன். அது இந்தியானாவில் உள்ள ஈவான்ஸ்வில் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. மேலும் எங்கே இந்த மனிதனுடன் சண்டையிட்டேனா அதே அரங்கத்தில் திரும்பிச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன் “இப்பொழுதும் நான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன், என்னுடைய சகோதானிடத்தில் அல்ல, பிசாசுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன். 15. எனவேதான் நாம் இன்றிரவு இங்கே இருக்கிறோம் இந்த இடம் மல்யுத்த முடிச்சுகளினால் ஒருவரையொருவர் பிணைக்க முயற்சிப்பதிலிருந்தும், பிசாசானவன் அத்தகைய முடிச்சுகளினால் கட்ட முயற்சிப்பதிலில் இருந்தும் மாற்றப்பட்டுள்ளது. வேத வாக்கியத்தின்படி அவன் அதில் இருந்து வெளியில் செல்லும் வரையிலும் அவனால் தப்பிக்க இயலாது. அவ்வளவுதான். ஆகவே இதைச் செய்வதற்கு தேவன் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் ஜெபிப்போம். 16. மீண்டும் நாம் வார்த்தையை வாசிப்பதற்கு முன்பு ஜெபத்தில் நினைவு கூற வேண்டுமென்று யாராவது இருப்பீர்கள் என்றால் சற்று உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? இன்றிரவில் இங்கு வெப்பமாக இருப்பதால் நாம் அவசரப்படுகிறோம். 17. மேலும் நாளை இரவு மீண்டும் வாருங்கள், அது புதன் இரவு, வெள்ளி இரவு மற்றும் சனிக்கிழமை காலை வர்த்தக புருஷர்களின் காலை ஆகார கூட்டம் இருக்கின்றது அதை அட்டவணையில் பார்த்தேன். சனிக்கிழமை காலையிலும், மாலையிலும் லேன் டெக் உயர்நிலைப்பள்ளியில் இருக்கிறது. ஞாயிறு பிற்பகல் மற்றும் ஞாயிறு இரவில் இங்கே இருக்கும் இப்பொழுது நாம்.... 18. என்ன? “ஒலிபெருக்கி அருகில் சென்று பேச வேண்டும்" என்று ஒரு சகோதரன் கூறுகிறார்" சரி. ஆமாம், நீங்கள் நன்றாக கேட்க முடிகிறதா? சபையார் "ஆம்" என்கின்றனர் அருமை. நான் இந்தப் பக்கம் நின்று கொண்டிருப்பதை நிஹனைவில் வைத்துக் கொள்வேன். இப்பொழுது நாம் தலைகளை வணங்குவோம். 19. இப்பொழுதும், பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை அணுகிக் கொண்டிருக்கும் இந்த இந்த வேளையில் ஆண்களும், பெண்களும் அவர்கள் உள்ளே வரும் போது இருந்த அதே நிலையில் திரும்பி செல்லாமல் ஒரு தீர்மானத்தை கொண்டவர்களாக உணர்ந்து இந்தக் கட்டிடத்தை விட்டு செல்வார்களாக நாங்கள் தேவனுடைய வீட்டிற்குள் பிரவேசித்துவிட்டு ஒருபோதும் அதே நிலைமையில் திரும்பிச் செல்லாதவாறு, நாங்கள் நல்ல நிலைமையில் திரும்பி செல்வோம் மோசமாக அல்ல. இதை அருளும் கர்த்தாவே, நாங்கள் இன்றிரவு உள்ளே வரும் போது இருந்ததை விட சிறப்பாக வெளியில் செல்ல முடியும். 20. இந்த ஒரு சில வார்த்தைகள், இந்த பாடங்கள் வேத வசனங்களை, ஒரு சிறிய செய்திக்காக நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன் இவைகள் கிறிஸ்வினுடைய கனத்திற்காக இருப்பதாக விசுவா சத்துடன் கேட்டு கொண்டிருக்கும், இதைப் பெற்றுக் கொள்ளும் அவருடைய ஜனங்கள் உண்மையில் கடைசி நாளின் கடைசி மணி நேரங்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை விசுவாசிப் பீர்களாக. சூரியன் நீண்ட நேரமாக அஸ்தமித்துக் கொண்டே வருகிறது. தேவனுடைய நீடிய பொறுமையானது அதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நிழல்கள் ஒன்றாக இணைந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது அதனுடைய நிழல்கள் ஒன்றாக இணைந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் இதற்கு முன்பு இல்லாத அளவில் இதை நாங்கள் உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டுமாய், தேவனே நாங்கள் ஜெபிக்கிறோம். 21. கரங்களை உயர்த்திய ஜனங்களை ஆசீர்வதியும் எங்களுடைய பாவங்களை மன்னிப்பீராக. உம்முடைய வார்த்தை மற்றும் உம்முடைய குமாரனுடைய வருகையிலும் விசுவாசத்தை எங்களுக்குத் தாரும். இதை அவருடைய நாமத்திற்காகவும் அவருடைய மகிமைக் காகவும் கேட்கிறோம் ஆமென். 22. அங்கே பின்னால் [“ஒரு சகோதரி மிகவும் வியாதியுற்ற நிலையில் மயக்கமுற்று கிடக்கிறாள்" நீங்கள் ஜெபம் ஏறெடுப்பீர்களானால்" என்று சகோதரர் பிரானகாம்-மிடத்தில் சிலர் கேட்கிறார்கள்”) அங்கே அந்த பெண் மயக்கமுற்ற நிலையில் இருக்கிறாள். சற்றுப் பொறுங்கள். அவள் மிகவும் வியாதியுள் ளவளாக இருக்கிறாள். நாம் ஜெபம் செய்வோமாக. 23. பரலோகப் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் வல்லமையானது இரவில் நீண்ட நேரமாக உட்கார்ந்து பவுலின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த வாலிபனை உயிருடன் கொண்டுவந்தது, அந்த வல்லமையானது மீண்டும் அவனை ஆரோக்கியமுள்ளவனாக எழுப்பியது, அதே போல மயக்கமுற்று இருக்கிற எங்களுடைய இந்த சகோதரிக்கும் உம்முடைய குமாரானாகிய இயேசுவின் நாமத்தினால் செய்யப் படுவதாக. ஒரு வேளை மிகுந்த வெப்பம் காரணமாக அவளுக்கு உடல் நலம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஜீவனின் தேவனே, பரிசுத்த ஆவியானவர் தாமே இவள் மேல் இறங்கி சாவுக்கேதுவான அவளுடைய ஜீவனை சரிப்படுத்துவீராக. இதை அருளும் கர்த்தாவே. இப்பொழுதும் அதை நாங்கள் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 24. அது மிகவும் மோசமடைந்தால், என்னிடம் கூறுங்கள், நான் திரும்பி சென்று அவளை பார்க்கட்டும். 25. நான் இப்பொழுது பரிசுத்த யோவானின் புத்தகத்தில் இருந்து 12-வது அதிகாரம், 32-வது வசனத்தில் ஒரு சிறிய பாகத்தை படிக்க விரும்புகிறேன், வசனத்தின் வழியாக அந்த ஒரு வழியில் மட்டுமே ஒரு பாடத்தை உருவாக்க முடியும். நான் கூறுவதை கேட்பதற்கு உங்களுக்கு கடினமாக இருப்பதாக காண்கிறேன். இந்தக் கட்டிடத்தில் எதிரொலித்து திரும்பவும் கேட்கிறது. நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தால் என்னால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. முடிந்தவரை நான் தெளிவாக பேச முயற்சிக்கிறேன். இயேசு பேசிய அந்த வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்”. 26. என்னுடைய பாடத்திற்கு தலைப்பாக எந்த ஒரு காரியத்திற்கும் தேவனால் அருளப்பட்ட ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எல்லாக் காரியங்களையும் சந்திப்பதற்கு தேவனால் அருளப்பட்ட ஒரே வழி மாத்திரமே உண்டு. இப்பொழுது இந்த வழியை அல்லாமல் வேறு எந்த ஒரு வழி இருக்கும் என்றால் அது தேவனுக்கு நெறி தவறினதாக இருக்கும். தேவன் ஒரு வழியில் மட்டுமே எந்தக் காரியத்தையும் செய்ய முடியும். அவர் முதலாவது செய்த அந்த வழியில் மட்டுமே எப்பொழுதும் அதைச் செய்ய முடியும். ஆகவே தெரிந்தெடுத்தலையும், தீர்மானங்களையும் மாற்றிக் கொண்டிருப் பவராக இருந்தால், பிறகு அவர் தேவனாக இருக்க முடியாது என்பதை காண்பிக்கிறதாக இருக்கும், அவர் முடிவற்றவர் இல்லை என்றாகி விடும். சிறந்த காரியங்களை முதல் இடத்தில் வைக்க அவர் அறிந்திருக்கிறார் அவர், அவர் மாறுவதில்லை. அவருடைய வழிகளை பரிபூரணமாக செய்கிறார். அவருடைய வார்த்தை பரிபூரணமானதாக இருக்கிறது. தேவனால் அளிக்கப்பட்ட எந்த ஒரு வழியில் இருந்தும் எதையாவது எடுத்துப் போட்டால் அல்லது எதையாவது அதனுடன் சேர்த்தால் அது தவறானதாக இருக்கும். 27. வேதாகமத்தில் வெளிப்படுத்துதல் என்று அழைக்கப்படும் கடைசி புத்தகத்தில் “ஒருவன் இந்த தீர்க்கதரிசன புத்தகத்தில் இருந்து ஒரு வார்த்ததையை கூட்டினால் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அவனுடைய பங்கை ஜீவப்புத்தகத்தில் இருந்து எடுத்துப் போடுவேன்” என்று எழுதியிருக்கிறதை நான் விசுவாசிக்கிறேன். 28. மேலும் இப்பொழுது தேவன் ஒரு வழியை, ஒரு பரிபூரண வழியை உடையவராக இருக்கிறார். ஆகவே நாம் சரியாக அதனுடன் நடக்க வேண்டும். அதனுடன் சிறந்த எதையாவது சேர்க்க முயற்சிக்கவும், அதிலிருந்து எடுத்துப் போடவும் முயற்சிக்க கூடாது எதையும் திணிக்கக் கூடாது, எடுக்கவும் கூடாது. நாம் அதை தேவன் எந்த வழியில் வைத்திருந்தாரோ அதை அந்த வழியில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற எல்லாமே தவறாக இருக்கிறது. 29. ஆதியாமத்தின் புத்தகத்தில் கூட துவக்கத்தில் ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில் இயற்கையை குறித்து பேசுகிறார். “ஒவ்வொரு வித்தும் அதனதன் இனத்தை பிறப்பிக்ககடவது” என்று தேவன் கூறியுள்ளார். ஒவ்வொரு வித்தும் அதன் இனத்தை கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது அதை மாற்றினால் தேவன் செய்ய வேண்டாம் என்று கூறின சில காரியங்களை செய்வதாக ஆகி விடும். 30. ஆகவே இப்பொழுது ஒரு மனிதன், தேவனுடைய வாழ்க்கை நெறியை விட்டு கடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் என்ன செய்தான் என்று பார்ப்போம். இதை நாம் ஒரு பின்னணியாக எடுத்துக் கொண்டு கர்த்தராகிய இயேசுவைக் குறித்து நான் உங்களுக்கு சொல்ல விரும்புவதை சொல்ல விரும்புகிறேன் பாருங்கள், ஒரு மனிதன்... தேவன் ஒரு விதையை உண்டாக்கிய போது, அவர் அதை பரிபூரணமாக உண்டாக்கினார், மனிதனோ வேறு சில காரியங்களை அந்த விதைக்குள் நுழைத்து எதையாவது செய்ய முயற்சிக்கிறான். 31. உதாரணத்திற்கு தெற்கு இன்டியானாவில் மற்றும் இன்டியானா முழுவதும் “கலப்பினச் சோளம்” என்று நாம் அதைக் கூறுகிறோம். அந்த சோளம் எவ்வளவு பெரிய கதிர்களை கொண்டதாக இருக்கிறது, ஆனால் அதில் எந்த ஒரு நன்மையும் இல்லை. அது காண்பதற்கு நன்றாக இருக்கிறது. முற்றிலுமாக அதில் எந்த ஒரு நன்மையானதும் இல்லை. 32. கோழிகளை கலப்பின முறையில் இனப்பெருக்கம் செய்வதை நாம் காண்கிறோம். இந்த நாட்களில் நீங்கள் எப்பொழுதாவது பொரித்த கோழியை சாப்பிட முயற்சி செய்திருக்கிறீர்களா? நல்லது. அப்படி செய்ய செய்ய உங்களுக்கு சிரமமாக இருந்தது அந்த வாசனை மற்றும் அதன் சுவை அப்படியே இருக்கும். கோழி வாசனையுடன் இருக்கும் என்று கூறுகிறோம். ஆனால் அது என்னவாக இருக்கிறது? அங்கே சுமார் எண்ணூறு பேர் ஜெபர்சன்வில் லூயிவில்-ல் மற்றும் நியூ ஆல்பனியில் கலப்பின கோழியையும், முட்டைகளையும் சாப்பிட்டு விட்டு வியாதியாய் படுத்துக் கிடக்கின்றனர், பாருங்கள். அவர்கள் அந்த கோழிகளை எடுத்து வித்தியாசமான வழிகளில் இனப்பெருக்கம் செய்கின்றனர். 33. பிறகு, இன்னொரு காரியம், கொசு மருந்தை (DDT) அந்த இடத்தில் தெளிக்கின்றனர். கோழிகள் மற்றும் விலங்குகள் மீது அந்த மருத்து விழுகின்றது. 34. நாம் நிச்சயமாகவே கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம் அவைகள் பலவித வித்தியாசமான காரியங்களினால் முழுவதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒன்றாக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மேலும் அது ஒன்றை உற்பத்தி செய்கிறது. அதில் நன்மை இல்லை. 35. நான் ஒரு மருத்துவ இதழில் இதைப்படித்தேன் என்று நம்புகிறேன், பின்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reeders Digest] என்ற பத்திரிகையிலும் அது மக்களின் வாழ்க்கை முறையை எப்படியாக மாற்றிப் போடுகிறது என்பதைப்பற்றி வாசித்தேன். இப்படிச் செய்வதன் மூலம், அது ஆண்கள் பெண்களைப் போலவும் தவறான போக்கில் செல்லும் படியாக செய்கிறது ஆண்களை பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் மாறிவிடும்படி செய்கிறது. ஆண்கள் பெண்மைத்தனம் கொண்டவர்களாகவும், பெண்கள் ஆண்மைத்தனம் உடையவர்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர். அது கலப்பு இனக்காரியமாக இருக்கிறது. கலப்பின விலங்குகளை நாம் சாப்பிடுகிறோம் அதில் உள்ள உயிரணுக்கள் உண்மையில் நமக்கு அது சரியான உயிர் அணுக்கள் அல்ல, ஆகவே, பாருங்கள் அதை செய்வதால் அந்த மிருகத்தின் அணுக்கள் அல்லது கோதுமை, சோளத்தில் இருந்து பெறப்படும் அணுக்கள் சரியானது அல்ல. 36. இப்படி பெரியதாக வளர, எல்லா நேரங்களிலும் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன, பார்ப்பதற்கு பெரிதாக இருக்கும். 37. இப்பொழுது ஒரு உண்மையான செடிக்கு, ஒரு ஆரோக்கியமான செடிக்கு எப்பொழுதும் தெளிக்கப்பட வேண்டியதில்லை. பூச்சிகள் அதை தொந்தரவு செய்யாது ஏனென்றால் அது பூச்சிகளை துரத்தி விடுகின்ற தன்மையை உடையதாக இருக்கிறது, அது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பூச்சிகளிடம் இருந்து தன்னைத்தானே தொடர்ந்து பாதுகாத்துக் கொள்கிறது. அது தேவனுடைய வழியாக இருக்கிறது. 38. உலகத்திற்குள் வியாதியைக் கொண்டு வந்தது பாவமே. தேவன் வகுத்த வழியிலிருந்து மனிதன் விலகிச் சென்ற போது, அவன் ஒவ்வொரு பிசாசுக்கும், வியாதிக்கும் இன்னும் இது போன்ற பலவற்றிற்கும் தன்னைத் தானே திறந்து கொடுத்தான் ஏனென்றால் அவன் தொடர்ந்து மருந்தை தெளித்துக் கொண்டிருந்தான். ஆகவே ஒவ்வொரு தலைமுறையும் இன்னொரு தலைமுறைக்கு இனப் பெருக்கம் செய்து கொண்டிருக்கிறது. நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்கலாம், உன்னுடைய மனைவி ஒரு கிறிஸ்தவளாக இருக்கலாம். ஆனால் உங்கள் உடலில் உள்ள மரபணுக்கள் இன்னுமாக உங்கள் தந்தை மற்றும் தாத்தாவிடமிருந்து மேலிருந்து கீழான நிலைக்கு வந்த மரபு வழியாகும், தானியேல் கூறியதைப் போல ஒவ்வொரு தலைமுறையும் பலவீனமாகவும் மற்றும் ஞானம் உள்ளவர்களாகவும் மாற்றி வீடுகிறது. மேலும் அது முழு மனித இனத்தையும் மரித்துப் போகும்படி செய்கிறது. 39. சற்று நினைத்துப் பாருங்கள், சில வருடங்களுக்கு முன்பு, பேஸ்பால் விளையாட்டின் போது யாரும் காயம் அடைந்ததாக கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். இப்பொழுது அவர்கள் மட்டையுடன் தலைக் கவசம் அணிந்து கொண்டு ஒவ்வொரு வருடமும் அநேகரை கொன்று விடுகின்றனர். நீங்கள் ஒரு மனிதனை அடிக்கிறீர்கள், அவன் சீமைப் பெருச்சாளியைப் போல மிகவும் மிருதுவாக இருக்கிறான், அப்பொ ழுதே அவன் மரித்துப் போகிறான். ஆகவே அதை கவனித்துப் பாருங்கள். அவர்கள் மீண்டும் அதை வழக்கமாக்கிக் கொண்டி ருக்கின்றனர். 40. இந்த குத்துச் சண்டையிலும் அதைப் போலவே, அது பாப் பிட்ஸ் மோன்ஸ் [Bop Fitzsimmons and carbett] மற்றும் கோர்பெட் இருவரும் நுற்று இருபத்தி ஐந்து சுற்றுக்கள் சண்டையிட்டனர் என்று நினைக்கிறேன். இப்பொழுது இரண்டிலிருந்து பத்து சுற்றுக்கள் மட்டுமே பிறகு அவர்கள் மீண்டும் வேலை செய்வதற்கு ஒருமாதம் வரை ஆகும் அவர்கள் வெறும் கைகளைக் கொண்டு சண்டை செய்தனர். இப்பொழுது சண்டையிடும் போது நம் கரங்களில் மிருதுவான உறைகளை மாட்டிக் கொள்கிறோம். மேலும் அவர்கள் விளையாட்டை நிறுத்த வேண்டியிருக்கும், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் குத்து விடும் போது அது அவரைக் கொல்லும் அளவுக்கு நெருங்கி சென்று விடுகிறது. பார்த்தீர்களா? மேலும் நீங்கள் பாருங்கள், அது...அப்படித்தான் இருக்கிறது. 41. மேலும் முழு மனித இனமும் போய் விட்டது. அங்கே எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொன்றும் அதன் முடிவிற்கு அருகில் இருந்து கொண்டிருக்கிறது. கால்நடைகள், சோளம் ஒவ்வொன்றும்.. 42. இப்பொழுது, நீங்கள் நடப்பட்ட ஒரு செடியை எடுத்து அதை எதனுடனும் கலப்பு செய்து மீண்டும் கொண்டு வந்து அதை நட முடியாது, அப்படி செய்ய முடியாது. அது தன்னைத்தானே இனப் பெருக்கம் செய்து கொள்ள முடியாது. அது முடியாது. ஏனென்றால் “ஒவ்வொரு விதையும் அதனதன் வித்துக்களைப் பிறப்பிக்க கடவது” என்ற அதே தேவனுடைய கட்டளையானது இன்னுமாக அங்கே இருந்து கொண்டிருக்கிறது. அப்படி இல்லையென்றால் அது ஜீவன் தாறுமாறாக்கப்பட்ட ஒரு கலப்பின வித்தாக இருக்கும். மேலும் அது சீக்கிரம் மரித்துப் போய்விடும். நீங்கள் ஒரு கலப்பின சோளத்தை நட்டால் அது கதிர்விடும் நேரம் வரும் போது மஞ்சள் நிறமாக மாறி மீண்டும் போய்விடும். 43. இப்பொழுது அதே வழியில் தான் விலங்குகளுக்கும் அதைச் செய்கின்றனர். விதைகளுக்கும் அதையே செய்கின்றனர். அவர்கள் மற்றும் எல்லாக் காரியங்களையும் அதன் வழியாக செய்கின்றனர். 44. எனவே சபைகளும் அதையே செய்தனர். அது ஒரு சிறந்த இடத்தில், அழகான ஒரு சபையை ஒரு-ஒரு அழகான காரியமாக, பெரிய காரியங்களை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஏதோ சில கொள்கைகள் போன்ற அப்படிப் பட்டவைகளை கலந்து கலப்பு செய்து வார்த்தைக்கு மேலாக வைத்து விட்டனர், அது தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்யாமல் மீண்டும் மரித்து போகிறது. பாருங்கள்? அங்கே....நீங்கள் வெறுமனே... 45. எந்த காரியத்தையும் செய்வதற்கு தேவனுடைய வழி ஒன்று மட்டுமே அங்கே இருக்கிறது. ஆகவே அதற்கு புறம்பே உள்ள அனைத்தும் விழுந்து போகும், ஏனென்றால் மீண்டும் அது தன்னை இனப்பெருக்கம் செய்து கொள்ள முடியாது. கடைசி காலத்தில் அது இப்படித்தான் இருக்கும் என்பதை நீருபித்து காண்பிக்கும்படியாக நான் இந்தக் காரியங்களைக் குறித்த வேத வசனங்களை வைத்திருக்கிறேன். 46. முட்டையின் நிலைமையை அன்றொரு நாள் கேட்ட போது அங்கே 1931-ம் வருடம் கர்த்தர் என்னிடம் உரைத்ததை நான் திரும்பிச் சென்று என்னுடைய வேதாகமத்தில் எழுதி வைத்தேன், "கடைசி நாட்களில் முட்டைகளை சாப்பிடக் கூடாது என்றும் பள்ளத்தாக்குகளில் வசிக்க வேண்டாம்" என்றும் ஜனங்களை எச்சரிக்கும்படி கூறினார். மேலும் பாருங்கள், என்ன விளைவுகள் ஏற்படும், காரியங்கள் என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே “கடைசி நாட்களில் பள்ளத்தாக்குகளில் வசிக்க வேண்டாம் என்றும், முட்டைகளை உண்ணக் கூடாது என்றும் கர்த்தர் முன்னறிவித்தார். எல்லாமே விஷமாகி விட்டது. பார்த்தீர்களா? அதுதான் அதுதான் இப்பொழுது நடக்கிறது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அதை கற்பனை செய்து பாருங்கள். 47.தேவனுடைய வார்த்தை வித்தாக இருக்கிறது. "தேவனுடைய வார்த்தை விதைக்கிறவன் விதைக்கிற ஒரு வித்தாக இருக்கிறது” என்று தேவன் கூறியிருக்கிறார். ஆகவே இந்த ஒரு வித்து மட்டுமே நித்திய ஜீவனை பிறப்பிக்கிறதாக இருக்கிறது. இப்பொழுது நாம் சபை வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, இப்படி வாழ்க்கை போன்ற அநேக வாழ்க்கைகளை கொண்டிருக்க முடியும்....ஆனால் தேவனுடைய வார்த்தையின் வழியாக மட்டுமே நித்திய ஜீவனைப் பிறப்பிக்க முடியும். மேலும் அவர்கள் இப்பொழுதுஅதனுடன் சமய நம்பிக்கை நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாடு களையும், சில கொள்கைகளையும், சில ஸ்தாபன சமயப் பிரிவுகளையும் அதனுடன் இணைத்து இனக்கலப்பு செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இப்படிச் செய்வதனால், செய்து கொண்டிருப்பதால், சபையானது விதையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய இடத்திற்கு வளரும் வரை, அதாவது உண்மையான வார்த்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய இடத்திற்கு வரும் போது, அது ஒரு கலப்பின நிலைக்கு திரும்பிச் சென்று விடுகிறது. அது அதன் ஸ்தாபன் போதனை களுக்கு திரும்பி தேவனுடைய உண்மையான வார்த்தையில் இருந்து தனியாக சென்று விடுகிறது. 48. ஆகவே, நாம் இப்பொழுது முடிவு நேரத்தில் இருந்து கொண்டி ருக்கிறோம். அங்கே எந்த ஒரு நம்பிக்கையும் விட்டு வைக்கப் படவில்லை. நாம் இந்த தேசத்தின் மீது கட்ட முடியாது. இந்த தேசமானது அரசியலின் அடிப்படையின் மேல் இருக்கிறது. அரசியல் முடிந்து விட்டது. அவர்கள்... அது எவ்வளவு ஊழல் நிறைந்ததாக இருக்க முடியுமோ அவ்வளவு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. 49. நீங்கள் வாழ்க்கை என்ற பத்திரிகையில் (Life magazine) அதில் ஒரு வழக்கறிஞர் அல்லது ஒரு நீதிபதியின் அவருடைய மகன் அல்லது பையனைக் குறித்து வாசித்திருக்கிறீர்களா? அவன் இந்த ரிக்கிகளில் வேகமாகவும் மிக மோசமாகவும் பந்தயங்களில் காரை ஒட்டுபவனாக இருந்தான். மேலும் அவருடைய மகன் காரை ஒட்டி ஒரு சிறிய பையனையும் மற்றும் சிலரையும் கொன்று போட்டான், அந்த அந்த நீதிபதி அவனை விடுதலை செய்து விட்டார். எல்லாமே அரசியல் விளையாட்டாகிவிட்டது. 50. பாருங்கள், தேசத்தின் வாழ்க்கை முறையானது முடிந்து விட்டது. இயற்கையான வாழ்க்கை முறையும் சென்று விட்டது. அது மிகவும் கலப்பினமாகிவிட்டது. எல்லாமே ஜீவன் இல்லாமல் போகும் படியான கலப்பினமாகி விட்டது. மனித குலத்தின் வாழ்க்கை யானது தொடர்ந்து ஒரு குழப்பமான சூழ்நிலைக்கு வந்து விட்டது. 51. மேலும் ஆவிக்குரிய வாழ்க்கையானது எப்பொழுதும் இருந்ததை விட மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்று விட்டது. பார்த்தீர்களா? பாருங்கள் அங்கே அது மிகவும் கலப்பினமாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் எதையாவது சிலவற்றை கலப்பு செய்து இந்த வழிதான் சிறந்தது என்று அது செய்யப்படுகிறது. நம்முடைய பெந்தெகொஸ்தே கூட பழைய மதுபான கூடங்கள் இதைப் போன்ற கீழ்த்தரமான இடங்களுக்கு நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 52. நான் ஒரு மதுபான கூடத்தில் மனம் மாற்றப்பட்டேன். ஆகவே இப்பொழுது நான் வீட்டில் இருப்பதைப் போலவே உணருகிறேன். நான் திரும்பவுமாக சென்று அந்த பணம் செலுத்தும் இடம் மற்றும் இடங்களை பார்த்தேன். அது ஒரு வர்ணம் பூசப்பட்ட ஒரு தேவாலயமாக இருந்தது, தேவனால் வழி நடத்தப்பட்டேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்தை நான் அங்கே பெற்றுக் கொண்டேன். 53. இப்பொழுது அந்த மாதரியான இடங்களைப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பின்னால் அழகான மலர்கள் இருக்க வேண்டும், பெரிய பெயர் இருக்க வேண்டும், அதற்குப் பின்னால் நிறைய இருக்க வேண்டும். இல்லையென்றால் ஜனங்கள் அதை பார்க்க மாட்டார்கள். அது வெளிப்புறத்தில் மிகவும் அழகாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஜனங்கள் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ள விரும்பமாட்டார்கள். 54. ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கவனியுங்கள்! காரியங் களைச் செய்வதற்கு தேவன் ஒரு வழியை கொண்டவராக இருக்கிறார், அவர் விரும்புகிற அந்த வழியில் நாம் அதைச் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் பிறகு அது பிரயோஜனமாக இருக்காது. இயேசு அவருடைய நாளில் அவர் வந்த போது அதைப் போன்ற ஒன்றைக் கண்டார். "நீங்கள் தேவனுடைய வார்த்தையை பாரம்பரியமாக்கி உங்கள் பாரம்பரியங்களினால் அதை பிரயோஜனமற்றதாக செய்துவிட்டீர்கள்” என்று கூறினார். பாருங்கள், அவர்கள் தங்களுடைய சொந்தப் பாரம்பரியமான கோட்பாடுகளை உள்ளே நுழைத்து, கலப்பினமாக்கி தேவனுடைய கட்டளைகளை பிரயோஜனமில்லாமல் செய்து விட்டனர். 55. இன்றும், அது அப்படியே இருந்து கொண்டிருக்கிறதை நான் அறிவேன். என் கிறிஸ்துவ நண்பனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை தவிர வேறு எதுவும் விடப்படவில்லை. அது தான் சபைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. அது வரும் வரையில் எப்பொழுதும் அதை ஸ்தாபனம் எடுத்துக் கொள்ளுமானால் அது முடிந்து விட்டது, காரணம் ஒவ்வொரு ஸ்தாபனமும் மீண்டும் ஸ்தாபனமாக மாறும் போது அது முடிந்து விடுகிறது. அது தான் காரியமாக இருக்கிறது. 56. நான் சொல்லக்கூடாது, ஆனாலும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும், நான் இங்கே சில காரியங்களை கூறுவேன். 57. நீங்கள் கவனிப்பீர்களென்றால், துவக்கதில் லூசிபர் (Lucifer) செய்ததைப் போலவே இன்றைய நாளிலும் அதே காரியத்தைச் செய்து வருகிறான். பாருங்கள்? கிறிஸ்துவின் மிகாவேலுடைய இராஜ்யத்தை விட மேலான, அதிக சௌந்தர்யம் உள்ள ஒரு இராஜ்யத்தை தனக்காகக் கட்ட வேண்டும் என்று விரும்பினான். அவன் அதைப் போன்ற இலட்சியங்களை அடைய வேண்டும் என்ற பேராவல் கொண்டவனாக இருந்தான். மேலும் அதைப் பெற்றுக் கொள்ள அவன் என்ன செய்தான்? என்றால் தங்களுடைய ஆதி மேன்மையை இழந்து விட்ட விழுந்து போன தூதர்களை எடுத்துக் கொண்டான். 58. மேலும் இன்று வார்த்தையை எடுத்தப் போட்டுவிட்டு ஸ்தாபன அமைப்புகளை உள்ளே புகுத்தி லூசிபர் சபைக்குள் நுழைந்து அதை பெற்றுக் கொண்டான். மேலும் புரெட்டஸ்டான்ட், மற்றும் எல்லோ ரையும் ஒன்றாக இணைத்து உலகளாவிய ஒரு சபையைக் கூட்டிச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். அது இப்பொழுது கத்தோலிக்க மார்க்கத்திற்குள் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. வேத வசனங்கள் என்ன கூறினதோ அதையே இந்த போப் என்பவர் செய்து கொண்டிருக்கிறார் எதன் மூலம் அவர் அதைச் செய்கிறார்? தேவனைக் குறித்து அறியாத மனிதனின் மூலம் அந்த பெரிய உலகளாவிய அமைப்பு நகாந்து கொண்டிருக்கிறது. காரணம் அதையே அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அது என்னவாக இருக்கிறது? விழுந்து போன தூதர்களைக் கொண்டும், விழுந்து போன லுத்தரன்களைக் கொண்டும், விழுந்து போன மெத்தோ டிஸ்ட்களைக் கொண்டும், விழுந்து போன பெந்தெ கொஸ்தேயினரைக் கொண்டும் தேவனுடைய வார்த்தையில் இருந்து ஆதிமேன்மையை இழந்து விட்ட அந்த பெரிய உலகளாவிய அமைப்பு திரும்பவும் சென்று கொண்டிருக்கிறது. விழுந்து போன செய்தியாளர்கள், இவர்கள் ஒரு சமயம் வார்த்தையுடன் நிலைத்து இருந்த செய்தியாளர்கள் ஆனால் அவர்கள் தங்களுடைய புத்திரசுவிகாரத்தை விற்றுப் போட்டு உலகத்திற்குள் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். அதே காரியம் இந்த கடைசி நாட்களில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆவிகளைக் கொண்ட மனிதனின் மூலம் லூசிபர் ஆரம்பத்தில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஆதிமேன்மையை காத்துக் கொள்ளாத விழுந்து போன துதர்களைக் கொண்டு அதையே இந்த நாளிலும் செய்து கொண்டிருக்கிறான். 59. ஓ, நீங்கள் ஒரு போதும் எந்த வழியையும் கடைபிடிக்க மாட்டீர்கள். நீங்கள் மதுபான கூடத்தில் இருந்தாலும் அல்லது தெருவில் இருந்தாலும், அல்லது எங்கிருந்தாலும் எனக்கு கவலை இல்லை. கிறிஸ்துவுக்குள் வந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள மனிதனுக்கு தேவனுடைய அருளப்பட்ட வழி இருக்கிறது. "நான் பூமியிலிருந்து உயர்த்தப் பட்டிருக்கும் பொழுது எல்லா மனிதர்களையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்" என்று இயேசு கூறியுள்ளார் 60. அவர் நேற்றும் என்றும், என்றும் மாறாத அதே தேவனாக இருக்கிறார். பரிசுத்த யோவான் சுவிசேஷம் 14-ம் அதிகாரம் 12- ம் வசனத்தில் "என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வார்" என்று வேதாகமத்தில் அவர் இப்படி கூறியிருக்கிறார். அது தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறது. "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும், என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷை களைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தம் அடைவார்கள்” என்று மாற்கு அதிகாரத்தில் கூறியிருக்கிறார். கிறிஸ்து செய்த காரியங்களாக அது இருக்கிறது. 61. அவர் தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுதலாக இருந்தார். அவர் தேவனுடைய வாக்குத்தத்தமாகவும், உறுதிபடுத்துபவராகவும் இருந்தார். அவர் சரீர வடிவில் தேவனாக இருந்தார். "தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார்" என்று வேதாகமம் கூறுகிறது. வானங்களையும் பூமியையும் படைத்த அந்த மகத்தான யெகோவா இயேசு என்னும் ஒரு சரீரத்திற்குள் தன்னை வெளிப்படுத்தினார். அது கர்த்தராகிய இயேசு அவரால், அந்த ஒரு மனிதரால் மட்டுமே நிறைவேற்ற முடியும். அவர் அதை மோசேயின் மூலம் சோதித்தார், யாக்கோபு-வின் இடத்திலும் அதைச் செய்தார், யோசேப்பிலும் அதைச் செய்தார். ஆனால் சரீரப் பிரகாரமான தெய்வீகத் தன்மையில் கிறிஸ்து என்கிற மனிதனுக்குள் முழுமையாக. தன்னை தானே அங்கே வெளிப்படுத்த முடிந்தது. ஆகவே தான், அவர் "உங்களில் யார் என்னிடத்தில் பாவமுண்டு என்று என்னை குற்றப்படுத்த முடியும்?” என்று கூறினார். பாவம் என்பது அவிசுவாசமாக இருக்கிறது. வேத வாக்கியமானது கூறினதை நான் சரியாகச் செய்யவில்லை என்றால், எந்த ஒரு வழியில் நான் தோல்வி அடைந்தேன் என்று யார் என்னைக் கணடனம் செய்ய முடியும்?” பாருங்கள் அது தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறது. 62. நீதிபரராகிய அந்த கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காக தம்முடைய இரக்கத்தின் மூலம் அவருடைய இரத்த அணுக்களை கொடுத்து நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க மரிக்க வேண்டியதாகயிருந்தது. அதுதான் தேவனால் அருளப்பட்ட வழியாக இருக்கிறது. 63. தேவனுடைய வழியை ஒருபோதும் எந்த ஒன்றாலும் தோல்வியுறச் செய்ய எந்த ஒரு காரியமும் இல்லை. அது என்னவாக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஜனங்கள் தங்கள் சொந்த கருத்துக்களை உள்ளே நுழைத்து விடாமல், தேவன் கூறியதை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை விசுவாசிப்பது நல்லது. பாருங்கள், மனிதன் தன்னுடைய சொந்தக் கருத்துக்களில் இருந்து வெளிவருவது அவனுக்கு மிகவும் கடினமாகத் தெரிகிறது தனிப்பட்ட முறையில் அவனே அதில் ஏதாவது காரியங்களை செய்கிறான். அவன் எப்பொழுதும் காரியத்தைக் கெடுத்து விடுகிறான். அந்த உணர்வுகளை நீங்கள் மன்னித்து விடுகிறீர்கள், தேவனுடைய வழி அவனுக்காக இருக்கும் பொது அவன் அவனுடைய சொந்த வழியை அதில் நுழைத்து எப்பொழுதுமே காரியத்தைக் கெடுத்து விடுகிறான். 64. ஒரு கோழிக் குஞ்சானது பிறப்பதற்கு தன்னை மூடிக் கொண்டிருக்கும் அதனுடைய ஓட்டை அலகால் குத்துவதை தவிர வேறு சிறந்த வழி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? வேறு ஏதேனும் வழியை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று நான் வியக்கிறேன் இல்லை, ஐயா. அது தன்னுடைய சிறிய அலகின் நுனியுடன் பிறக்கிறது. அதனுடைய சின்ன தலை முன்னும் பின்னுமாக சென்று ஒவ்வொரு முறையும் “ஆமென், ஆமென், ஆமென்” என்று அசைத்துக் கொண்டு அந்த மேல் ஓட்டை சுரண்டிக் கொண்டே தானாக வெளியில் வரும்வரை சுரண்டிக் கொண்டிருக்கும். ஆம், ஐயா நீங்கள் ஒரு போதும் ஒரு சிறந்த வழியை கண்டுபிடிக்க முடியாது, ஏனென்றால் அது தேவனுடைய அருளப்பட்ட வழியாக இருக்கிறது. 65. இப்பொழுது, அதனுடைய சிறிய அலகின் நுனியை அது உடையதாக இருக்குமானால், “ஏழை சிறிய கோழி குஞ்சே உனக்கு தெரியுமா, நீ ஒரு சிறந்த வழியைப் பெற்றுக் கொள்ள நான் ஒன்றை கூறப் போகிறேன், நான் அந்த மேலேட்டை சற்று உடைத்து உன்னை வெளியில் கொண்டு வரட்டுமா?” என்று நீங்கள் கூறுவீர்களென்றால் அது அந்த கோழி குஞ்சை கொன்று விடும். அவ்வளவுதான் அது இறந்து விடும். அது வாழ முடியாது. 66. அது வெளியில் வரும் போது காற்றையும், மற்றக் காரியங்களையும் பெற்றுக் கொள்ள போதுமான பலத்தைக் கொண்டிருக்கும்படியாக அதற்கு ஒரு வழிமுறை கொடுக்கப் பட்டிருக்கிறது. அது தன்னுடைய சிறிய அலகைக் கொண்டி ருக்கிறது. நீங்கள் அதை பார்க்கிறீர்கள். ஆகவே அது தன்னுடைய சிறிய தலையை அசைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை பார்க்கிறீர்கள். ஆகவே அது தன்னுடைய சிறிய தலையை அசைத்து, முன்னும் பின்னுமாக தன் அலகு வெளியில் வரும் வரை சுரண்டிக் கொண்டிருக்கும். 67. நீங்கள் அதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டாலோ, அல்லது ஒரு முக்கியமான கருத்தை உணரச் செய்யும் விதமாக, கிறிஸ்தவர்களாக பிறப்பதற்கு அதுதான் தேவனுடைய வழியாக இருக்கிறது. பீடத்திற்கு நடந்து சென்று ஒரு மனிதனுக்கு வலது கையை கொடுத்து, உங்கள் பெயரை ஒரு புத்தகத்தில் பதிவு செய்து கொள்வதல்ல. தேவன் உங்களுக்கு பலத்தை அளிக்கும் வரையிலும், அழுது, கெஞ்சி கேளுங்கள் அதன்பிறகு உலகத்தின் மேல்ஓட்டை விட்டு நீங்கள் வெளியே வந்து விடுவீர்கள். 68. யாராவது போதகர் கொஞ்சம் மேல் ஓட்டை உடைத்து உங்களை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுகிறேன் விட்டீர்கள் என்று கூறினால் நீங்கள் அங்கேயே மரித்து அவ்வளவுதான். 69. நீங்கள் தேவனுடைய அருளப்பட்ட வழியில் வர வேண்டும். தேவனுடைய ஆவியானல் பிறந்த மற்றவர்களும் அப்படித்தான் வர வேண்டியிருந்தது. அங்கேயே தங்கியிருங்கள்! எது வரையிலும்? எது வரையிலும்! முதன் முதலில் பெந்தெகோஸ்தே குழுவினரை எருசலேம் நகரத்தில் தங்கியிருங்கள் என்று கூறினார். அதுவரையிலும் எந்த ஒரு வித்தியாசமானதையும் செய்ய வேண்டாம், ஒரு நாள், ஐந்து நாட்கள், ஒன்பது நாட்கள் அல்லது எதுவாக இருந்தாலும் அவர்கள் பரிசுத்து ஆவியனால் நிரப்பப்படும் வரையிலும், அவர்கள் மீண்டும் பிறக்கும் வரை அங்கேயே தங்கியிருங்கள். 70. சிறிய வாத்துகளும், பெரிய வாத்துகளும் வடக்கிலிருந்து தெற்கு பாகத்தை நோக்கிச் செல்வதற்கு முன்பு ஒருபோதும் அவைகள் அந்த வழியை அறிந்திருக்கவில்லை. ஆனால் அவைகள் கூட்டமாக அங்கே செல்வதற்கு தேவன் ஒரு வழியை அருளியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு அதைக்குறித்து ஒரு சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டேன். நான் டெக்சாஸ் நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தேன். நான் கவனித்துப் பார்த்த பொழுது, அரை மைல் தூரத்திற்கு அதிகமான தூரம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அவைகளைக் குறித்து என்ன விஷயம் என்று சிலரிடம் கேட்டேன். “வாத்துக் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து கொண்டிருக்கிறது” என்று அவர்கள் கூறினர். 71. நல்லது. முடிவாக நான் அங்கே இருந்த போது நீங்கள் நினைப்பதை நீங்களே கேட்க முடியாத அளவில் இருந்தது. அவைகள் ஒரு எழுப்புதலைக் கொண்டிருந்தன. அவைகள் பறந்து செல்லும்படி ஒரு தயார் நிலையில் இருந்தன. வடபாகத்தில் உள்ள அவைகளுடைய இருப்பிடத்திற்குச் செல்ல அவைகள் சென்று கொண்டிருந்தன. அவைகள் அங்கே சென்று குஞ்சுகளை நன்றாக வளர்க்க முடியும். ஆகவே அவைகள் ஒரு எழுப்புதலைக் கொண்டிருந்தன, புறப் படுவதற்கு முன் ஒன்று சேர்ந்து கொண்டிருந்தன. 72. இப்பொழுது அது தேவனுடைய அருளப்பட்ட ஒரு வழியாக இருக்கிறது அவைகள் அனைத்தும் திரளாக ஒன்று சேர்ந்து கொண்டிருந்தன. ஒன்று பாதையின் வெகுதொலைவில் இருந்தது, மற்றொன்று மேலே எங்கோயோ இருந்தது, ஒன்று நெல் வயலில் இருந்தது, மற்றொன்று கோதுமை வயலில் இருந்தது ஆனால் ஏதோ ஒன்று, ஏதோ ஒரு வழியில் ஒரு குறிப்பிட்ட நாளில் (ஏன், எப்படி என்று எனக்குத் தெரியவில்லை) ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் இங்கே அவைகள் அனைத்தும் ஒன்றாக கூடிவருகின்றன. ஏதோ ஒன்று அவர்களை இழுத்துக் கொண்டிருந்தது. நாம் அதை உள்ளுணர்வு என்று அழைக்கிறோம். அது தேவன் நமக்கு அளிக்கும் உள்ளுணர்வாக இருக்கிறது. பறந்து செல்லுவதற்கு முன்பாக ஒரு ஒன்று கூடுதல். 73. தேவன் இப்பொழுது என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு புரிகின்றதா? அந்த வாத்துக்கள் எப்பொழுதம் செய்ததைப் போலவே அவருடைய சபையை (Church) ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு எழுப்புதலை, ஒரு பண்டைய பாணியிலான எழுப்புதலைப் பெற்றுக் கொள்ளும்படியாக இழுத்துக் கொண்டிருக்கிறார். 74. இப்பொழுது அவைகளை வேறு வழியில் கொண்டு செல்ல முயற்சித்தால் என்ன செய்வது, "நல்லது நாம் சற்று வேறு வழியில் செல்வோம்” என்று கூறுமானால், அவைகள் அங்கே ஒரு போதும் சென்றிருக்காது. இல்லை, ஐயா. “சரி, இப்பொழுது நாம் அவைகளுக்கு ஒரு சிறந்த வழியை உண்டாக்குவோம். நாம் ஒரு பெரிய கோழிக்கூண்டு[Coop] கோழிக்கூண்டு அல்லது வாத்துக்கூண்டு அப்படி நீங்கள் விரும்பிய ஒன்றில் வாத்துக்களை, சிறிய வாத்துக்களை அடைத்து வைத்து அங்கே மொத்தமாகக் கொண்டு சென்று அங்கே அவைகளை எடுத்துக் கொள்வேன் என்று நீங்கள் கூறுவீர்களானால், அது ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஓ, சாலை வழியாக கொண்டு சென்று நாம் அவைகளுக்கு சிறப்பான உணவை கொடுக்க முடியும் என்று கூறுவீர்களானால் இல்லை" நீஙகள் அப்படிச் செய்ய முடியாது. 75. அவைகள் அங்கு பறந்து செல்லும் போது, வயல்களில், குளங்களில் அவைகளுக்கு தேவையான, தானியம், புல் பூண்டுகள் வலிமை கொடுக்கக்கூடிய காரியங்களை வரிசையாகப் பெற்றுக் கொள்கின்றன. அப்படி அது கிடைக்கவில்லையென்றால், அவைகள் தங்கள் குஞ்சுகளை வளர்க்க முடியாது, அவைகளால் முடியாது. அவைகள் அப்படி எடுத்துக் கொள்வதாக இருந்தால் அவைகள் அசலான வாத்துக்களாக இருக்காது. அவைகள் நம்மைப் போன்ற கலப்பினமாகத்தான் இருக்கும். பாருங்கள், ஆனால் அதைச் செய்வதற்கு தேவன் ஒரு வழியை வைத்திருக்கிறார். 76. அவைகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வையுங்கள். அப்படி ஒன்றாக ஒரு அமைப்புக்குள் (Denomination) வைக்கும் போது அந்த வாத்துகளுக்கு இப்பொழுது என்ன நடக்கும் தெரியுமா, கொல்லப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல, அவைகளை ஒன்றாக வைக்கும் போது, நீங்கள் அவைகளை கொல்வதற்குச் சென்று கொண்டிருப்பதாக ஆகி விடும், அந்த வாத்துக்கள் நம்மை விட அதிகமாகவே அதைப்பற்றின சிறந்த புரிந்து கொள்ளுதலை கொண்டுள்ளன. அவைகளை மனிதனால் செய்யப்பட்ட ஒரு சிறைக்குள் அடைத்து வைத்து விடுகிறீர்கள், பாருங்கள் பிறகு தேவன் தங்களுக்கு அருளின வழியில் அவைகள் செல்ல முடியாமல் வானத்தில் சுதந்திரமாக அந்த வாத்தக்கள் அவைகள் பறந்து செல்ல முடியாது என்பதை அறிந்து கொள்கின்றன. ஆகவே அவன் ஒரு கூண்டிற்குள் அடைத்து வைக்கப் படுகிறான், பிறகு அவன் மரித்து போய் விடுகிறான். அவ்வளவுதான் நீங்கள் அவைகளை கூண்டுக்குள் அடைக்கும் போது அவைகள் கொல்லப்படுகின்றன. மேலும் அந்த வாத்துக்கள் சிறந்ததை அறிந்திருக்கின்றன. நாம் அதை அறிந்து கொள்ள வேண்டும். 77. இதைவிடச் சிறந்த வழியை நீங்கள் தெரிந்தெடுக்க முடியாது. இங்கே வழி என்று நீங்கள் அமைக்க விரும்பினால், அந்த ஒருவழி அதுதான் என்று நான் நினைக்கிறேன். தென்பாகத்தில் உள்ள வீட்டிற்குசெல்வதற்கு வழி அதுவாகத்தான், இருக்கிறது. ஆனால் இங்கே மேலே, செல்லும் வழியும் அதுதான். என்று நினைக்கிறேன். இப்பொழுது கவனி, நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் உனக்குச் சொல்கிறேன். நீ ஒரு குறிப்பிட்ட வழியில் திரும்பிச் சென்று, வேறொரு வழியில் இறங்கி, இந்த வழியாக கீழே வரவேண்டும் என்று நீ நீ கூற முடிந்தால், தேவனுடைய அருளப்பட்ட வழியை விட வேறொரு சிறந்த வழியில் அவைகளை கொண்டு செல்ல ஒரு சிறந்த வழியை உன்னால் தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறாயா? நல்லது, நீங்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களைப் பெற்றுக் கொள்வீர்கள், அவைகள் இங்கே கடந்து வரும்படியாக ஒரு காந்தம் அல்லது ஏதோ ஒரு வகையில் புயல்களின் வழியாக, மற்றும் ஒவ்வொன்றின் வழியாகவும் அவைகளை இழுத்துக் கொள்வீர்கள். பாதி இழக்கப்பட்டதாக இருக்கும். 78. நல்லது, நீங்கள் அவைகளுக்கு ஒரு சிறந்த வழியைக் கொடுக்க முடியாது. அவைகள், தேவனுடைய அருளப்பட்ட வழியில் சென்று கொண்டிருக்கின்றனர். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் அந்த புயலின் வாசனையை அவைகள் நுகர முடியும், மேலும் அந்த புயலின் தாக்குதலை எதிர் கொள்ள தங்களை தயார்படுத்திக் கொண்டு எப்படி தரையில் இறங்க வேண்டும். மீண்டும் எப்படி எழும்ப வேண்டும் என்று அவைகளுக்குத் தெரியும். அவைகளுக்காக தேவன் ஒரு அருளப்பட்ட வழியை உடையவராக இருக்கிறார். மேலும் தேவனுடைய அருளப்பட்ட வழியில் பின்பற்றி செல்ல போதுமான உணர்வை அவைகள் பெற்றுக் கொள்கின்றன. நாம் அப்படிச் செய்வது இல்லை. தேவன் நமக்கு அளித்த வழியை விட சிறந்த வழியை செய்ய நாம் முயற்சிக்கிறோம், பாருங்கள். அதனுடன் நம்முடைய சொந்த காரியங்களை வைக்க விரும்புகிறோம். ஒரு வாத்து அப்படிபட்டவைகளுக்கு கவனம் செலுத்துவதில்லை தேவன் விரும்புகிற வழியில் மட்டுமே அவன் சென்று, அதனுடைய முன்னோர்கள் செய்ததைப் போல, மகத்தான – மகத்தான - மகத்தான மகத்தான கொள்ளுப்பாட்டி செய்ததைப் போல அதைப் போன்றே தொடர்ந்து சென்று கொண்டிருப்பான். 79. சற்று நாம் நமது மூதாதையர்களின் பெந்தெகொஸ்தே நாளுக்கு திரும்பவுமாக சென்று பாப்போம் என்றால், அங்கே அதை அவர்கள் எப்படி பெற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்வோம். அவருடைய வார்த்தையாலும், அவருடைய பரிசுத்த ஆவியாலும் தேவன் ஒரு வழியை உடையவராக இருந்தார். ஆனால் நாமோ டாக்டர் இன்னார் - இன்னார் மற்றும் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் மனிதர்கள் கூறுவதையே விரும்புகிறோம். அந்த வழியானது தேவனுடைய வழியிலிருந்து விழுந்து போன வழியாக இருக்கிறது. தேவனுடைய வழியில் சபையானது நல்ல முறையில் பயணித்துக் கொண்டிருந்தது. அங்கே நிசாயா ஆலோசனைக் குழுவில் ரோமாபுரியானது அவர்களுடைய மோசமான தவறை செய்தது. நீங்கள் என்னதான் எடுத்துக் கொள்ள முடிந்திருந்தாலும்..... 80. மேலும் இப்பொழுது அவர்கள் சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதற்கு அல்லது தேவன் அவர்களுக்கு அருளின வழிகாட்டியை விட சிறந்த வழிகாட்டியை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் இங்கே வயதான ஒரு ஆண் வாத்தை வெளியில் எடுத்து கொள்ளுங்கள், சில குறிப்பிட்ட விசேஷமான ஒரு அழைப்பைக் கொடுக்கும், உங்களுக்கு தெரியும். அங்கே வெளியில் சென்று அதனுடைய வாயிலிருந்து ஒரு மெல்லிசையை எழுப்பும் போது "ஒரு வாத்து அதை புரிந்து கோள்ள முடியும். ஓ, எல்லா வாத்துகளும் அவனுக்கு கட்டுப்படும். எந்த வழியில் எந்த வழியில் அவைகளை நடத்திச் செல்ல வேண்டும் என்று அவனுக்கு தெரியும், ஏனென்றால் உண்மையில் அவன் பண்பட்டவனாகவும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான், மேலும் உறுதியுள்ளவனாக இருக்கிறான். அதை அவனால் செய்ய முடியும். "பிற்பகலுக்குள் ஒரு வாத்தும் கூட அங்கே வெளியில் இருக்காமல் அவனைச் சுற்றிலுமாக சூழ்ந்து கொண்டிருக்கும். 81. “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன அவைகள் அந்நியன் பின் செல்வதில்லை”. 82. அதனுடைய குரல் அழகானதாக இருந்திருக்கக்கூடும். அதற்கு சிறந்த இறக்கைகள் இருந்திருக்க வேண்டும். அவன் நன்றாக போஷிக்கப்பட்டிருக்க வேண்டும். பண்பட்ட வாத்தாக இருக்க வேண்டும். வெளியில் அவன் நெளிவு, சுழிவு மற்ற காரியங்களை செய்ய தகுதியுடையவனாக இருக்க வேண்டும். அவனுக்கு அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் அவனிடம் கூற வேண்டியது இல்லை, ஆனால் நான் உங்களுக்கு கூறுகிறேன், அவன் அந்த குறிப்பிட்ட ஒலியை சரியாக எழுப்பவில்லை என்றால் அந்த வாத்துகள் ஒரு போதும் அவனை பின் தொடராது. அது சரியே. தேவனால் அளிக்கப்பட்ட அந்த உள் உணர்வு குரலினால், தேவனால் அளிக்கப்பட்ட அந்த உணர்வு மூலம் வாத்துகள் தங்களை வழி நடத்தம் தலைவனை அறிந்திருக்கின்றன. மேலும் நீங்கள் ஒரு போதும் மற்றொரு சிறந்த வழியை அவைகளுக்கு அளிக்க முடியாது, காரணம் அது உண்மையில் அவைகளுக்கு தேவனுடைய அருளப்பட்ட ஒரு வழி இருக்கிறது. 83. ஆகவே மீண்டும் கவனியுங்கள், வயதான வாத்து மற்றும் வாத்துக் கூட்டத்தை அழைத்துச் செல்ல பயிற்சி கொடுக்கப் பட்டிருந்தால், நீங்களும் நிச்சயமாகவே துப்பாக்கிகளின் மத்தியிலும் கூட அவைகளை கொண்டு செல்வீர்கள், ஆனால், உங்களுக்குத் தெரியும், தேவன் அளித்த இந்த வழிநடத்துபவர் அவைகளை எடுத்துக் கொண்டு தேவனுடைய அருளப்பட்ட அந்த ஸ்தலத்திற்கு அங்கே கொண்டு செல்பவராய் இருக்கிறார். அவர் நேராக சரியாக அங்கே கொண்டு செல்வார் ஏன் லூசியானவுக்கு கீழே இருக்கின்ற நெல் வயல்கள் மீதமுள்ள வருடத்தில் அவைகளை நிச்சயமாகவே பாதுகாத்துக் கொள்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று தேவனுக்கு தெரியும் என்பதையும் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதையும் அல்லது அவைகளுக்கு அளிக்கப்பட்ட வழியை அந்த வாத்துக்கள் அறிந்திருக்கிறதை கவனியுங்கள். 84. தேவன் அவைகளுக்குக் கொடுத்ததை விட ஒரு சிறந்த கருவியை உங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அந்த சிறிய வாத்து ஒரு போதும் அந்த குளத்தை விட்டு வெளியே சென்றது கிடையாது. அவன் வடக்கு பாகத்தில் உள்ள குளிர்ந்த வனப்பகுதியில் பிறந்தவன். அவனுடைய வாழ்க்கையில் ஒரு போதும் அந்த குளத்தை விட்டு வந்ததில்லை, ஆனால் எப்படி இருப்பினும் அது சரியாக பயணம் செய்கிறது கிழக்கே செல்ல முடியும், மேற்கே, வடக்கே, தெற்கே, தான் விரும்புகிற எந்த திசையிலும் அது செல்ல முடியும். ஆனால் ஏதோ ஒரு காரியம் சரியாக அது தெற்கு நோக்கி பயணம் செய்ய அதைக் கட்டுப்படுத்துகிறது, குளிர் காலங்களில், புயல்களில் மற்றும் ஒவ்வொன்றிலிருந்தும் எப்படி வெளியே கடந்து சென்று உணவு இருக்கும் இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று அதனிடம் கூறுகிறது. அந்த வாத்துக்களுக்கு தேவன் ஒரு கருவியை உடையவராக இருக்கிறார், அது மட்டுமே அவைகளை சரியாக நடக்கச் செய்கிறது. ஆகவே தேவனுடைய அருளப்பட்ட வழியை விட சிறந்த வழியை அவர்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது (இல்லை, ஐயா). 85. ஒரு கைக்குழந்தை தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள அழுவதை விட சிறந்த வழியை அவர்கள் ஒரு போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் அந்த குழந்தையிடம் சென்று, நல்லது நீங்கள் அவனிடம் இப்படி கூறக்கூடும், அவனுடைய கையை அசைத்து அல்லது கூ....கூ...கூ கூ கூ கூ என்று சத்தம் இடு என்று நாம் கூற முடியும், ஆனால் அழுவதைத் தவிர வேறு எதிலும் அது கவனம் கொள்ளாது. அதை பெற்றுக் கொள்வதற்கு அவன் அழ வேண்டும் அவ்வளவுதான். "நல்லது, நான் இப்பொழுது என்னுடைய அலாரம் கடிகாரத்தை இங்கே மேலே வைத்து விடுகிறேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நிமிடத்தில் இந்த குழந்தைக்குப் பால் கொடுக்க கொடுக்க வேண்டியுள்ளது. நீ அலாரம் கடிகாரத்தை மட்டும் திருப்பினால், அந்த பாட்டில் அவனுடைய வாயில் போய் ஒட்டிக்கொள்ளும் என்று கூறினால் அவன் கூச்சலிட்டு அதை வெளியே துப்பி விடுவான். அதற்கான நேரம் அது அல்ல. ஆனால் தேவன் ஒரு வழியை உடையவராக இருக்கிறார். அவர் அங்கே உள்ள அந்த சிறிய அலாரத்தை திருப்புகிறார். அப்படி செய்யும் போது, அவன் தன் பால்புட்டியைப் பெற்றுக் கொள்ளும் வரை அழுவதை நிறுத்தப் போவதில்லை. அவ்வளவுதான் அதற்காக அவன் அழ வேண்டும். 86. மேலும் தேவன் அவருடைய குழந்தைகளுக்கு அழும்படியாக இந்த வழியைத்தான் சிபாரிசு செய்கிறார். அவருடைய விசுவாசிகள் அவர்களுக்கு என்ன தேவையோ அதற்காக அழவேண்டும். அவ்வளவு தான் உங்களுடைய தேவைகளுக்காக அவரிடம் அழுங்கள். 87. அறிவுசார்ந்த சொற்பொழிவுகளுக்கு செவி கொடுக்க வேண்டாம். “நல்லது. இப்பொழுது நான் உனக்குக் கூறுகிறேன், அவர்கள் பேசிக் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், இந்த தெய்வீக சுகமளித்தல் போன்ற காரியங்கள் இந்த நாளுக்கு உரியதல்ல, என்று நான் விவரித்துக் கூறமுடியும் அது இந்நாட்களுக்கு உரியதல்ல" என்று சிலர் கூறுவார்கள். கவனியுங்கள், ஒரு உண்மையான, தேவனுடைய குழந்தை அதற்கு எந்தவித கவனமும் செலுத்தாது. 88.அவன் தேவனுடைய வார்த்தை நிருபிக்கப்படும் வரையிலும் அழுது கொண்டே இருப்பான் தேவனுடைய சிறு குழந்தைகள் தேவனுடைய வார்த்தையால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றனர். அவனுக்கு தேவ னுடைய வார்த்தையைத் தவிர வேறு சிறந்த வழி இந்த உலகில் கிடையாது. காரணம் மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, ஆனால் தேவனுடைய வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் தேவனுடைய வாயில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வார்த்தையினால் பிழைப்பான். அவன் தன் குதிகால்களை தூக்கி, கத்தவும் கூச்சலிடவும் செய்வான் தேவனிட மிருந்து உறுதிப் படுத்தப்பட்ட பதிலை பெற்றுக் கொள்ளும் வரையிலும். 89.அவர்களில் சிலர், "ஓ நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியாது. அங்கே அப்படிப்பட்ட காரியங்கள் எதுவுமில்லை” என்று கூறுவார்கள். அது கடந்த காலங்களுக்கு உரியது என்று கூற முயற்சிக்கின்றனர். அந்நிய பாஷை என்று அப்படி ஏதும் இல்லை, தீர்க்க தரிசனம் என்று எதுவும் கிடையாது, அவையெல்லாம் ஆதி சபைகளுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, “அந்த நாட்களெல்லாம் கடந்து போய்விட்டது” என்று கூறுவார்கள் 90. அது பசிதாகம் கொண்ட இருதயங்களை உடைய ஜனங்களை நிறுத்தி விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “அந்த வாக்குத் தத்தமானது, உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மற்றும் கர்த்தர் வரவழைக்கும் தூரத்தில் உள்ள யாவருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது" என்று வேதாகமம் கூறிய வார்த்தையை அறிந்த வர்களாக அதை எடுத்துக் கொண்டு விடாமல் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கே அவர்கள் முகங்கள் அழுது கொண்டும், கெஞ்சுதல்களோடும் மேலும் தங்கள் குதிங்கால்களால் உதைத்துக் கொண்டும் தேவன் தாமே துவக்கத்தில் அவர்களுக்கு செய்ததைப் போல அவர்கள் மீது பரிசுத்த ஆவியை ஊற்றப்படும் வரையிலும் கூச்சலிட்டுக் கொண்டு அதில் நிலைத்திருக்கின்றனர். ஆமென். அது என்னவாக இருக்கிறது? அது தேவனுடைய அருளப்பட்ட வழியாக இருக்கிறது. அது சரியாக இருக்கிறது. மேலும் அது தேவன் அவர்களுக்கு அருளிய ஒரு வழி என்பதை அவர்கள் விசுவாசிக்கின்றனர். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு அந்த அருளப்பட்ட வழியை அவர்களுக்குக் கொடுத்தான். 91. அவர்களில் சிலர், கைகளை குலுக்குங்கள், தெளிக்கப்படுங்கள் சபைக்கு வாருங்கள், இதுதான் அது, அது அப்படித்தான் இருக்கிறது என்று கூறுகின்றனர். தேவன் சில காரியங்களைக் கொண்டு சபையையும் இந்த உலகத்தையும் நியாயம் தீர்க்க வேண்டும். அவர் சபையைக் கொண்டு நியாயத் தீர்ப்பு செய்தால் எந்த சபையைக் கொண்டு அதைச் செய்வார்? கத்தோலிக்க சபையைக் கொண்டு நியாயத் தீர்ப்பு செய்வாரானால் எந்த கத்தோலிக்க சபை? ரோம சபையைக் கொண்டு நியாயத் தீர்ப்பு செய்தால், பண்டைய ஆர்தோடக்ஸ் (Orthodox) சபை இழக்கப்பட்டு போய் விடும், அப்படியென்றால் அதை எந்த பண்டைய ஆர்தோடக்ஸ் சபையைக் கொண்டு நியாயம் தீர்ப்பார், கிரேக்க பண்டைய சபை மற்றவைகளும் இழக்கப்பட்டதாக இழக்கப்பட்ட நிலையில் இருக்கிறது, பாப்டிஸ்ட் சபையைக் கொண்டு செய்தால் மெதடிஸ்ட் சபை இழக்கப்பட்டுப் போகும். காரணம் நீ அதில் இருந்து ஒரு வார்த்தையை கூட்டவோ அல்லது எடுத்துப் போடவோ முடியாது. பார்த்தீர்களா? ஆகையால் நினைவில் கொள்ளுங்கள். ஒரு வார்த்தை அவநம்பிக்கை கொள்ளச் செய்து விடும் 92. ஒரே வார்த்தை எல்லா இருதய வலிக்கும் எல்லா வியாதிகளுக்கும், எல்லா மரணங்களுக்கும், மேலும் கர்த்தராகிய இயேசு வந்து மரித்து நம்மை மீட்டுக் கொள்வதற்கும் கூட காரணமாகி விட்டது. ஏவாள், அவள் சற்று சாத்தானுடன் சேர்ந்து அவிசுவாசத்துடன் காரணத்தை தேடினாள் அல்லது சாத்தான் அவளுடன் சேர்ந்து காரணத்தை தேடினான் அவள் அவிசுவாசம் கொண்டாள். "சத்தியமாக தேவன் அதைச் செய்யமாட்டார்.” 93. பாருங்கள், லூசிபருடைய வியாபாரமும் இன்று அப்படித்தான் இருக்கிறது, “தேவன் நம்மை நோக்கிப் பார்க்க முடியாது. நாமும் கூட ஒரு பெரிய ஜனக்கூட்டமாக, பல்லாயிரம், லட்சக்கணக்கான வலிமைமிக்க ஜனங்களை கொண்ட ஒரு பெரிய கூட்டமாக இருந்து கொண்டிருக்கிறோம். தேவன் நம்மை நிராகரித்து விடுவார் என்று நீ நினைக்கிறாயா? அவர், நிச்சயமாக, அவர் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். அவருடைய வார்த்தையை மறுதலித்த பொழுதே நீ மறுபக்கத்தில் தான் இருக்கிறாய். அது தேவன் நிராகரித்தது அல்ல நீ தேவனை நிராகரித்ததனால் அது அங்கே தான் இருந்து கொண்டிருக்கிறது. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 94. நீங்கள் ஜீவ அப்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். "மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை ஆனால்.. ஒரு சில வார்த்தைகள், இப்பொழுது ஒரு வார்த்தை, பிறகு ஒரு வார்த்தை? "தேவனுடைய வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் பிழைப்பான்” மேலும் வேதாகமம் பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்டதாக இருக்கிறது அது சரியாக இருக்கிறது, மேலும் பரிசுத்த ஆவி தேவனாக இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு மனிதனும் பரிசுத்த ஆவியின் மூலமாக எழுதப்பட்ட வேதாகமத்தின் மூலம் சென்று கொண்டிருக்கிறான். மேலும் ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய பரிபூரணமான சத்தியமாக இருக்கிறது அதனோடு எதையும் மாற்ற முடியாது என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் இந்த வேதாகமத்தின் மூலம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவில் நாம் நியாயத் தீர்க்கப்படப் போகிறோம். ஆம் ஐயா. 95. அறிவு சார்ந்த சொற்பொழிவில் நான் நம்பிக்கை வைப்பதில்லை. நான் வார்த்தையை மட்டுமே விசுவாசிக்கிறேன். அதன் பிறகு அது வெளிப்பட்டு நிறைவேறும் வரையில் அதில் நிலைத்திருக்க வேண்டும் பிறகு நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்ன? “மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழவில்லை, ஆனால் தேவனுடைய வார்த்தையில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிழைப்பான்." 96. அன்றொரு நாள் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். “சோதோமின் பாவங்கள் லோத்தை தினமும் வாதித்துக் கொண்டி ருந்தது" என்று வேதாகமம் கூறுகிறது. எவ்வளவு லோத்துக்கள் இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து கொண்டிருக்கின்றனர்! என்று சற்று நினைத்தேன் ஒரு நல்ல மனிதன் ஜன்னல் அருகே உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறான். ஜன்னல் வழியாக அவன் வெளியே பார்த்து நவீன ஆடை அவிழ்ப்புகளை தெருவில் பார்க்கிறான் அங்கே அந்த வழியில் தொடர்ந்து அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அதைப்பற்றி அவைகளிடம் எதுவும் கூற முடியாது. அது தவறு என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களை ஒன்றும் கூறமுடியாது. ஆமாம் அவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் அவர்களுடைய கூட்டத்தில் அரை குறை ஆடை அணிந்தவர் களாக இருக்கின்றனர். முடி கத்தரிக்கப்பட்ட பெண்கள், இறுக்க மான கால்சட்டைஅணிந்தவர்கள் புகைபிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள். சமுதாய மது அருந்திக் கொண்டு இழிவான நகைச் சுவைகளை பேசிக் கொண்டு இருக்கின்றனர். அது தவறு என்று அவர்களுக்கு தெரியும். அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. அப்படி செய்தால், அவர்களுடைய தலைமையகம் எதையாவது ஒன்றை சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள். 97. ஓ தேவனே இப்படிப்பட்ட காரியங்களில் இருந்து பிரித்துக் கொள்ளும் சில ஆபிரகாம்களை எங்களுக்குத் தாரும். சரி. அப்படிப்பட்ட நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆம் ஐயா. 98. அவருடைய வார்த்தையானது எப்பொழுதும் சத்தியமாக இருக்கிறது. அவருடைய வார்த்தை நிரூபிக்கப்படும் வரையிலும் அதை அவருடைய பிள்ளைகள் அழுது கொண்டு, விசுவாசித்துக் கொண்டும் இருக்கின்றனர். மேலும் அவருடைய வார்த்தையானது அவருடைய சித்தமாக இருக்கிறது. தேவனுடைய சித்தம் என்னவென்று அறிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் வேதாக மத்தில் அதை காணலாம். அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அதற்கு முரண்பாடாக இருக்கின்ற எந்தக் காரியங்களும் தாறுமாறாக்கப்பட்டதாக இருக்கிறது. அதுவே அப்படிப்பட்ட கலப்பின ஒரு நிலைமையை பெற்றுக் கொள்ளாதீர்கள். தேவன் என்ன கூறினாரோ ஆகவே சத்தியமாக இருக்கிறது. 99. "யாராவது உங்களிடம்" இப்பொழுது நான் சபைக்கு வருகிறேன், ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுதலை நாங்கள் விசுவாசிப்பதில்லை. எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. உண்மையில் நீங்கள் விசுவாதித்த போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று கூறுவார்கள். 100. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில், "நீங்கள் விசுவாசித்த பொழுது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டீர்களா?” என்று பவுல் கூறுகிறார். பார்த்தீர்களா? "பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்களா?” "நல்லது, அப்படியானால் எப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள்" என்று நீங்கள் கூறுகிறீர்கள். 101. பேதுரு பெந்தெகொஸ்தே. நாளன்று. “மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று கூறினார். அவர் சொன்னது இதுதான், "வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது." 102. இது ஜனங்கள் மருந்துச்சீட்டில் உள்ள மருந்தை படித்து விட்டு பிறகு அதை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதைப் போல இருக்கிறது. மருந்துச் சீட்டை படிப்பதில் என்ன நன்மை இருக்கப் போகிறது. சரி, அவர்கள் கருத்தரங்களுக்கு செல்கின்றனர். சபை வரலாறை படிக்கிறார்கள், சபையின் நெறிமுறைகளை கற்கின்றனர், வேதம் என்ன கூறியுள்ளது என்பதையும் படிக்கின்றனர். கிரேக்க வார்த்தை களுக்கும் கூட என்ன அர்த்தம் என்பதை நாங்கள் சொல்லமுடியும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த பாட்டில் என்ன கூறுகிறது, அந்த வழிமுறைகள் என்ன கூறுகிறது என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்கள் பெந்தகொஸ்தே நாளில் பேதுரு என்ன கூறினார் என்பதை நான் உங்களுக்கு கூற முடியும். அந்த வாக்குத்தத்தம் உங்களுக்காக இருந்து கொண்டிருக்கிறது என்று கூற முடிந்தால் "நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று நீங்கள் கூறுவீர்கள். நான் இங்கே அமர்ந்து கொண்டு இந்த மருந்தை நான் விசுவாசிக்கிறேன் அந்த வியாதிக்கு சரியான மருந்து என்று விசுவாசிக்கிறேன் என்று கூற முடியும். ஆனால் வியாதி சரியாகும் வரை, நான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் பாருங்கள், நேர்மை என்பது ஒரு பொருட்டல்ல. “நான் உத்தமமாக விசுவாசிக்கிறேன் அது சத்தியமாக இருக்கிறது என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் அதை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நீங்கள் அதை எடுத்துக் கொள்ளும் போது அது நோயாளியின் மேல் இருக்கின்ற விளைவுகளை காண்பிக்கும். மேலும் நீங்கள் தேவனுடைய வழியை எடுத்துக் கொள்ளும் போது அது உண்மையான பரிசுத்தத ஆவியின் பலன்களை உங்களுக்கு காண்பிக்கிறது. விசுவாசத்தின் மூலம் ஆபிரகாமின் வித்தாக இருக்கிறது. அது உங்களுக்கு சில காரியங்களை செய்கிறது. அது உங்களை பற்றிப் பிடித்துக் கொள்கிறது. அது உங்களிடமிருந்து அவிசுவாசத்தை உதறித்தள்ளிவிட்டு மேலான காரியங்களின் மீது அன்பை வைக்கிறது. 103. "நான் உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லா மனிதர்களையும் என்னிடம் இழுத்துக் கொள்வேன்”என்று இயேசு கூறினார். "ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. மேலும் அந்த வார்த்தை மாமிசமாகி நமக்குள் வாசம் செய்தது". அந்த வார்த்தை இன்னும் தேவனாக இருக்கிறது. ஆகவே அந்த வார்த்தை உயர்த்தப்பட்டிருக்குமானால், உங்கள் இருதயத்திற்குள் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை தேவனுக்குள் இழுத்துக் கொள்ளும். அது சரியாக இருக்கிறது, ஏனென்றால் அது தேவனாக இருக்கிறது. ஆமென். ஓ எவ்வளவாக நான் அவரை நேசிக்கிறேன். அந்த வார்த்தை எப்பொழுதும் சத்தியமாக இருக்கிறது. ஆம் ஐயா. தேவனுடைய அருளப்பட்ட வழியை விட சிறந்த வழி ஒருபோதும் இருக்காது. 104. ஒரு சமயம் யோபு என்கிற ஒரு தீர்க்கதரிசி இருந்தான் அவனுக்கு தேவை இருந்தது, அவன் கொஞ்சம் ஆறுதல் தேவையுடையவனாக இருந்தான். மேலும் அவனுடைய சபை அங்கத்தினர்கள் வந்து அவனைக் குற்றப்படுத்திக் கொண்டி ருந்தனர். “யோபுவே, நீ...நீ...நீ.. கொஞ்சம் தேவனுடன் சரியாக நடக்கவில்லை உனக்கு தெரியுமா” என்று அவனை குற்றப் படுத்தினர். ஆனால் இன்னுமாக ஒரு தேற்றரவாளன் தேவையு டையவனாக அவன் இருந்தான் அவனுடைய மனைவியும்கூட அவனுக்கு ஆறுதல் கூறாதவளாக இருந்தாள். "யோபுவே நீர் தேவனை சபித்து, ஜீவனை விடும்" என்று கூறினாள். 105. “ஆனால் அவன் "நீ பைத்தியக்காரி பேசுகிறப் போல பேசாதே” என்று கூறினான். மேலும் தேவன் அவனுக்காக இயேசு கிறிஸ்துவை ஒரு தரிசனத்தில் அருளும் வரையில் அதில் நிலைத்திருந்தான். இப்பொழுது அதை விசுவாசிக்கிறீர்களா? 106. அந்த தரிசனம் வந்த போது, “என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களில் அவர் பூமியின் மேல் நிற்பார். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்துப் போட்டாலும் இன்னுமாக என்னுடைய மாம்சத்தில் இருந்து நான் தேவனைக் காண்பேன்; நானே அவரைக் காண்பேன், என்னுடைய கண்களால் அதைக் காண்பேன்” என்று அவன் கூறினான். 107. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அந்த தரிசனத்தில் அவன் இயேசுவைப் பார்த்தான். மேலும் இயேசு வார்த்தையாக இருக்கிறார். அதன்பிறகு யோபு ஒரு தேற்றரவாளனை உடையவனாக இருந்தான், தேவன் ஒரு வார்த்தையாகிய தரிசனத்தை அவனுக்கு அனுப்பினார். வ்யூ..! 108. அந்த வார்த்தையை வாசிப்பதும் அந்த வார்த்தையை விசுவாசிப்பதும் தான் எனக்கு கிடைக்கும் ஆறுதல் வார்த்தை என்ன கூறுகிறது. "ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய், என்னுடைய வார்த்தையே சத்தியமாக இருக்கிறது" என்று இயேசு கூறினார். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை குறித்து கவனம் செலுத்தாதீர்கள் அவர்கள் கூறுவதை நான் மதிக்கிறேன். ஆனால் விசுவாசம் என்று வரும் போது, அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், நான் அதை விசுவாசிக்க மாட்டேன். தேவனுடைய வார்த்தை கூறியதற்கு மேல் நான் ஒன்றையும் விசுவாசிக்க மாட்டேன். “மனிதன் தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தையினாலும் பிழைப்பான' அதிகமான வார்த்தைகளால் அல்ல. வேதாகமத்தின் வழியாக வருகின்ற "தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்டு வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" இப்பொழுது மனிதன் அப்பத்தால் வாழ்கிறான் அவன் வாழ்வதற்காக தேவனுடைய அருளப்பட்ட வழியாக அது இருக்கிறது. 109. மேலும் யோபு வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்பே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். ஆகவே கவனியுங்கள் அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான், ஆகவே தேவனுடைய வார்த்தையானது தீர்க்கதரிசிக்கு வருகிறது. அதன் பிறகு தேற்றரவு தேவைப்பட்ட போது அவனால் எதையும் காண முடியவில்லை. அவன் சபைக்குச் சென்றான், அவனுடைய சபையும் அவனுக்கு ஆறுதல் எதையும் செய்ய முடியவில்லை, ஆனால் அவனுக்கு எதிராக குற்றம் சுமத்தியது. ஆனால் தேவன் ஒரு தரிசனத்தின் மூலமாக அவனுக்கு அந்த வார்த்தையை காண்பிக்கும் வரை அவன் அதில் நிலைத்திருந்தான். அதன் பிறகு அவன் தேற்றப்பட்டான். ஆகவே அவன் காலூன்றி எழுந்து நின்றான், மின்னல்கள் அடித்தன, இடிகள் முழங்கின. "இந்த தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்துப் போட்டாலும் இன்னுமாக மாம்சத்தில் இருந்து நான் தேவனைக் காண்பேன். அவர் என்னிடம் பேசினார் என்று கூறினாள். மரணம் அல்லது எது வேண்டு மானாலும் என்னை அடிக்கட்டும், அது ஒரு துளியும் கூட வித்தியாசத்தை உண்டாக்காது, காரணம் நான் தேவனைக் காண்பேன். அவருடைய வார்த்தையாகிய அவரை நான் தரிசனத்தில் பார்த்தேன்." என்று கூறினான். 110. ஒரு நாள் இஸ்ரவேல், சிறை பிடிக்கப்பட்டு அவர்கள் எகிப்தில் இருந்தனர், ஆகவே அவர்களுக்கு ஒரு வழி தேவையாக இருந்தது, எகிப்திலிருந்து வெளியே செல்ல அவர்களுக்கு ஒரு வழி தேவையாக இருந்தது. மேலும் கவனியுங்கள், மோசே என்ற பயிற்சி பெற்ற ஒரு மனிதனை நாம் பார்க்கிறோம். அவன் இராணுவத்தின் எல்லா காரியங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டவனாக எகிப்தின் அடுத்த பார்வோனாக ஆவதற்காக இருந்தான். சில நாட்களில் அவனுடைய ஜனங்களை விடுதலை பண்ண முடியும் என்று நினைத்தான். ஆகவே அவன் வெளியில் வந்தான், இந்த மகத்தான மோசே என்கிற மகத்தான மனிதன் வார்த்தையிலும், செயலிலும் மகத்தானவனாக இருந்திருக்க வேண்டும். மேலும் அவனுடைய இராணுவ பலத்தினால் முயற்சி செய்தான், ஆனால் அது தேவனுடைய அருளப்பட்ட வழியாக இருக்கவில்லை. சில காரியங்கள் குறைவுபட்டதாக இருந்தது. 111. ஆனால் ஒரு நாள் பாலைவனத்திற்கு பின்புறம் எரிந்து கொண்டிருந்த புதரைக் காணும் வரை ஒரு தெளிவில்லாதவனாக இருந்தான் வார்த்தையின் தரிசனம் ஒன்றை பார்த்தான். அது தேவனாக இருந்தது. ஆகவே அவன் அப்படிச் செய்த போது அந்த தரிசனமானது, “நான் என்னுடைய வாக்குத்தத்தை நினைவு கூர்ந்தேன்” என்று உரைத்தது ஆமென். “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுக்கு நான் அளித்த வாக்குத்தத்தை நான் நினைவு கூர்ந்தேன், ஆகவே நான் அவர்களை விடுவிக்க இறங்கி வந்தேன்” என்று உரைத்தது. ஆமென். ஓ, நான்! பிறகு, அன்றொரு நாள் இந்த கூடாரத்தில் நான் கூறியதைப் போல, மோசே தேவனுக்கு ஒரு சிறைக்கைதியாகி விட்டான். 112. தேவனைத் தவிர யார் உன்னை ஒரு சிறைக்கைதியாக்க முடியும்! பவுல் ஒரு சிறைக்கைதியாக மாறினான். பாருங்கள்! நீங்கள் நினைப்பதை நீங்கள் பார்க்க முடியாது, வேறொருவர் நினைப்பதையும் நீங்கள் பார்க்க முடியாது. அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சிறைக்கைதியாக இருக்கிறீர்கள். 113. குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு செல்ல அவன் விரும்பாத போது ஆவியின் ஏவுதலால் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டான். அந்த ஆவியானவர் சில இடங்களுக்கு அவன் போகாதபடி தடை செய்திருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். பல சமயங்களில் அவன் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். 114. ஒரு நாள் அந்த வயதான குறி சொல்பவன் அவனுக்கு பின்னால் ஒடிவந்து, கூச்சலிட்டபடி அவனுக்குப் பின்னால் சுற்றி வந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் அப்படி செய்து கொண்டி ருந்தான். ஆகவே பவுல் தேவனுடைய ஆவியினால் அவனை கடிந்து கொள்ள விரும்பினான். ஆகவே கடைசியாக 'அவனை கடிந்து கொள்” என்ற வார்த்தையைக் கேட்ட போதும் சுற்றிலுமாக திரும்பி பார்த்து, தேவன் அப்படி கூறிய போதும் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. 115. ஓ, தேவனுடைய மகிமையின் பிரசன்னத்தில் சபையானது இருக்கு மானால், ஒரு நாள் தேவன் தனது வல்லமையை அதற்குள் ஊற்றுவார், காரியங்கள் நடக்கும். ஆனால் நீங்கள் உங்களுடைய ஆகாரத்தை அதனுடன் கலக்க முடியாது; நீங்கள் ஒரு கலப்பினமாக ஆகிவிடுவீர்கள். தேவன் கூறியதில் நிலைத்திருங்கள், வார்த்தையில் சரியாக நிலைத்திருங்கள், மேலும் தேவன் அதை சத்தியம் என்று உறுதிப்படுத்துவார். ஆம், ஐயா. 116. தேவன் இஸ்ரவேலுக்கு ஒரு வழியை அருளினார். ஒரு அபிஷேகிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியின் மூலம் ஒரு அக்கினி ஸ்தம் பத்தை அனுப்பி, அடையாளங்கள் மற்றும் சிருஷ்டிப்பின் அடையாளங்கள் மூலம் அந்த தீர்க்கதரிசி உரைத்த வார்த்தையை உறுதிப்படுத்தினார். “மோசே, நீ சென்று கடலின் நேராக கிழக்கு நோக்கி உன் கோலை நீட்டி, வண்டுகள் வரக்கடவது” என்று சொல் என்றார். மேலும் மோசே, ஒரு மனிதனால் சிருஷ்டிக்க முடியாது என்பதை அறிந்தவனாக தேவனுடைய வார்த்தையுடன் தன்னுடைய கோலை கிழக்கு நோக்கி நீட்டி "எகிப்து முழுவதும் வண்டுகள் பறக்கடவது” என்று கூறினான். ஒரு மனிதனுடைய வார்த்தை யினால் வண்டுகள் அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டு தோன்றின. 117. தேவன் ஒரு மனிதனை அவருடைய கருவியாகப் பயன் படுத்துகிறார். அவர் மனிதனைக் கொண்டு மட்டுமே பேசமுடியும். “நான் திராட்சை செடி நீங்கள் அதன் கிளைகள்” என்று அவர் கூறினார். அது சரியே. 118. அங்கு தவளைகள் இல்லை. “மோசே, அங்கே வெளியில் சென்று உன்னுடைய கோலை நீட்டி தவளைகள் வரக்கடவது" என்று சொல் என்று அவர் கூறினார். அது அவனுக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய ஊழியமாக இருந்தது. 119. மோசே, “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், ஒரு நிமிடம் பொறுங்கள், இது அந்த நாட்களைப் போல் இருக்கக்கூடும். இப்படி ஒரு காரியத்தை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. நான் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. அவன் என்ன செய்ய வேண்டும் அவனுக்கு கூறும்படி எந்த ஒரு அறிவு சார்ந்த ஸ்தாபனங்களும் அவனுக்கு இல்லாமல் இருந்தது. 120. அவன் தேவனுடைய வாக்குத்தத்தின் படியாக வாழ்ந்தான். தேவனுடைய வீட்டில் ஒரு சிறைக்கைதியாக இருந்தான் அவன் சென்று ஆவியானவர் செய்யக்கூறியதை மட்டுமே செய்ய முடிந்தது. ஆமென். ஆகவே அவன் தன்னுடைய கோலை நீட்டி தவளைகள் உண்டாகக் கடவது என்று உரைத்தான், நிச்சயமாக. 121. அவர்கள் தங்கள் பாவத்திற்காக சில காரியங்கள் அவர்களுக்கு தேவைப்படும் போது ஒரு ஆட்டுக்குட்டியை கொடுத்தனர். தேவன் ஒரு ஆட்டுக்குட்டியின் மூலம் ஒரு வழியை உண்டாக்கினார். அவர்கள் ஒரு கண்ணியில் அகப்பட்டிருந்தபொழுது தேவன் அந்த செங்கடலை [Red Sea] கடப்பதற்கு ஒரு வழியை உண்டாக்கி, ஒரு தீர்க்கதரிசியையும் அவர்களைப் பின் தொடர ஒரு அக்கினி ஸ்தம்பத்தையும் அனுப்பி, வார்த்தையை, ஒரு மனிதனை கொண்டு தேவன் நிருபித்தான். அவன் கூறியது சரியாக நிறைவேறியது. ஆனால் அவர்கள் அந்த கடலைக் கடந்து விட்ட பிறகு அவர்களுக்கு ஒரு நியாயப் பிரமாணம் தேவைப்பட்டது. பாருங்கள், அது வெறும் மனித இயல்பாக இருக்கிறது. அவன் தனது சொந்த வழிகளை உள்ளே நுழைக்க விரும்புகிறான். 122. ஓ, தேவனுடைய அருளப்பட்ட வழியானது எப்பொழுதுமே அவருடைய வார்த்தையை அனுப்பிக் கொண்டிருப்பதாகும். 123. மரணம் எகிப்தை தாக்கியது. அவர் எகிப்தில் உள்ள ஒவ்வொன்றையும், கொல்வதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஞாபகம் கொள்ளுங்கள், அந்த நெருப்பு விழுந்து கொண்டு, கொப்புளங்கள் வெடித்து சிதறிக் கொண்டும், ஆலங்கட்டி மழை பெய்து கொண்டிருந்த போது தேவன் அவரால் தெரிந்து கொண்டவர்களை அதில் சிக்காமல் இருப்பதற்காக ஒரு இடத்தை அருளியிருந்தார். கோசேன் (Goshen) என்ற ஒரு இடத்தை அவர் வைத்திருந்தார். அந்த தேசத்தின் மீது மரணத்தின் ஆவியானது வந்து கொண்டிருந்தது. மேலும் ஒவ்வொரு மனிதனும், நினைவில் கொள்ளுங்கள், நாம் மரிப்பதற்கு மரணமே காரணமாக இருக்கிறது. ஆகவே மரணத்தில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள எதையாவது உடையவர்களாக இருக்க வேண்டும் அல்லது மரணம் அவர்களை அழித்துப் போடும், காரணம் அவர்கள் பாவம் செய்திருந்தனர். ஆகவே தேவன் அவர்கள் அப்படி மரிக்காமல் இருப்பதற்கு, அவரைப் பின்பற்றிக் கொண்டிருந்த அந்த அவருடைய ஜனங்களுக்காக, ஒரு ஆட்டுக்குட்டியை அருளியிருந்தார். அவர் களுடைய கதவுகளில் இருந்த இரத்தமானது, அவர்களுடைய தலைச்சன் பிள்ளைகளை காப்பாற்றியது. தேவனுடைய வழி அருளப்பட்டிருந்தது. எகிப்து தங்களுடைய பெரிய தேவசாஸ்திரிகள், மற்றும் பெரிய மந்திரவாதிகள் அனைவராலும் அவர்களிடம் இருந்த எதையாவது கொண்டு தங்களை தடுத்துக் கொள்ள முடியும் என்று நினைத்த பொழுது மரணதூதன் சென்று அதை முழுவதுமாக அழித்து போட்டான், அங்கே இரத்தம் இல்லாமல் இருந்ததே காரணம். 124. இன்று இயேசு கிறிஸ்துவின் ஜீவனுக்குள் இருக்கும் இரத்தத்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்ற எந்த ஒரு மார்க்கத்தின் மேலும் மரண தூதன் அதன் மேல் இருந்து கொண்டிருக்கிறான்; மரண தூதன் தேவனிடம் இருந்து பிரிந்து விடுகிறான். ஆம், நிச்சயமாகவே அந்த இரத்தத்தைப் பெற்றுக் கொண்டிராத எந்த ஒரு சிறிய பாகத்தின் மேலும் ‘இக்கபோத்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. “நல்லது, அந்த இரத்தத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று நீங்கள் கூறுவீர்கள். 125. அந்த இரத்தமானது எந்த ஒரு விளைவையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு குழந்தையைப் போல் உங்களுடைய வாழ்க்கையில் விளைவுகளை காண முடியவில்லை என்றால் இயேசு என்ன கூறினாரோ அது அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும் அதில் கவனமாக இருங்கள், அந்த இரத்தத்தை தவிர அதற்கு பின்னால் வேறு ஏதாவது காரியங்களை நீங்கள் கொண்டிருக்கலாம். நீங்கள் அங்கே கொஞ்சம் வேத சாஸ்திரத்தை நுழைத்து இருக்கலாம் அல்லது ஏதாவது சிறிய உணர்ச்சிவசப்படுதலை நுழைத்திருக்கலாம். நான் குலுங்கினேன், நான் நடுங்கினேன். நான் நடனமாடினேன். நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன்” என்று நீங்கள் கூறலாம் கவனமாக இருங்கள். 126. இந்த மருந்து எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்குமானால், அது ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மையாக இருக்கும். அது பாவத்திலிருந்து உங்களை பாதுகாக்கும், பாவ வாழ்க்கையில் இருந்து உங்களை சுத்தமாக்கும். அது உங்களை ஒரு வித்தியாசமான நபராக செய்யும். அது சந்தேகங்களை அப்பால் எடுத்துப் போட்டுவிடும், மேலும் அது உங்களை இயேசு கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக்கிவிடும். 127. மரணம் எகிப்தை தாக்கியது. தேவன் அந்த நாளில் நிலைக்காலின் மேல் இருந்த அந்த இரத்தத்தைக் கொண்டு விசுவாசத்தை அவிசுவாசத்திலிருந்து பிரித்தார். 128. தேவனுடைய ஒவ்வொரு கட்டளைகளையும் பின்பற்றின ஒரு விசுவாசமுள்ள ஊழியக்காரனாக மோசே இருந்தான், அவன் ஒரு இடத்திற்கு வந்த போது, அவன் மரணமடைய வேண்டியாதிருந்தது. அவன் மிகவும் வயது சென்றவனாக 120 வயதை அடைந்தவனாக இருந்தான் ஆகவே அவன் மரிக்க வேண்டியதாகியிருந்தது. அவனுக்கு மரிப்பதற்கென்று இடமில்லை. கீழே அவர்களுடன் இருந்த அந்த எல்லாவித முணுமுணுப்புகளுடனும், அதைப் போன்ற ஒவ்வொரு காரியங்களுடனும் மரித்துப் போக அவன் விரும்பவில்லை. தேவன் அவனுக்காக ஒரு கன்மலையை அருளியிருந்தார் ஆமென். அவன் எல்லா அவிசுவாசங்களையும் விட்டுவிட்டு ஏறத்துவங்கினான். தேவன் அவனுக்காக அங்கே ஒரு கன்மலையை வைத்திருந்தார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த தேசத்தை நோக்கியவாறு அந்தப் பாறையின் மீது அவன் மரித்தான். 129. அதுதான் அந்த இடமாக இருக்கிறது. அந்தக் கன்மலை இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது, அது உங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கிறது. நீங்கள் அவரை ஒரு முறை பற்றிக் கொள்ளுங்கள் தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் முற்றிலும் சத்தியமாக இருக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். அது சரியே. "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் எதைக் கேட்பீர்களோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ஏனென்றால் அவர் வார்த்தையாக இருக்கிறார். நீங்கள் அதில் நிலைத்திருக்கும் போது, உங்கள் மூலம் அது தன்னை வெளிப்படுத்துகிறது. 130. கவனியுங்கள், அவன் மரித்த பிறகு, வனாந்தரத்திற்கு போகும் வழியில் இருந்தான், அவனை தூக்கிச் செல்லும் ஆட்கள் (pallbearers) அவனுக்குத் தேவையாக இருந்தது. தேவ தூதர்களை அருளியி ருந்தார் ஏன்? ஏனென்றால் இந்த பூமியில் உள்ள எந்த மனிதனும் அவன் சென்று கொண்டிருக்கும் இடத்திற்கு அவனை எடுத்துச் செல்ல முடியாது. யாராவது அவனை கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது, ஆகவே தேவ தூதர்கள் வந்து அவனை பரம வீட்டிற்கு[Home] அழைத்துச் சென்றனர். 131. ஒருநாள், ஏனோக்கிற்கு ஒரு ஏணி தேவைப்பட்டது. அவன் ஐந்நூறு வருடங்கள் தேவனோடு நடந்து அவருடன் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுக்கு ஒரு ஏணி தேவையாக இருந்தது. தேவன் ஒரு பெரும்பாதையை அளித்தார் சரியாக நடந்து மேலே பரம வீட்டுக்குச் சென்றான் (Home) 132. ஒரு சமயம் எலியாவுக்கு அங்கி தேவையாக ஒரு இருந்தது, குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு இரதத்தை தேவன் அவனுக்குக் கொடுத்தார். ஓ, நான். 133. சிம்சோனுக்கு ஒரு ஈட்டி தேவையாக இருந்தது, தேவன் ஒரு காட்டுக் கழுதையின் தாடை எலும்பை அவனுக்குக் கொடுத்தார், அவன் அதைக் கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரை அடித்து கீழே தள்ளினான். தேவன் உங்கள் தேவைகளுக்கு அருளுகிறார், தேவன் ஒரு வழியை உடையவராக இருக்கிறார். 134. சிம்சோன், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், இந்த தாடை எலும்பு கூர்மையானதாக இல்லையே, இது ஈட்டியைப் போல இல்லையே, அந்த பெலிஸ்தியருடைய தலைச் சீராக்கள் பெரியதாக இருக்கிறதை பார்த்தீர்களா? என்று கூறியிருந்தால் என்னவாக இருந்திருக்கும் அவன் தேவனுடைய அருளப்பட்ட வழியை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை சரியாக அடித்தான். 135. தேவன் எதை எடுத்துக் கொள்ள கூறினாரோ அது மட்டுமே உனக்கு தேவை. உன்னால் முடிந்த மட்டும் கடினமாக அடித்துக் கொண்டே இரு, சிறிது நேரத்தில் விடுதலையை பெற்றுக் கொள்வாய். ஆம் ஐயா ஆம். 136. யோசுவாவுக்கு ஒரு பாலம் தேவையாக இருந்தது, தேவன் ஒரு வல்லமையுடன், வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் மதகு, வெள்ளத்தை தடுக்கும் ஆவிக்குரிய மதகு ஒன்றை அருளினார். அது யோர்தான் நதியை திரும்பச் செய்தது அதனால் அவன் தொடர்ந்து முன்னேறிச் சென்று தேவனுடைய வார்த்தையை, அந்த வாக்குத்தத்தை நிறைவேற்றினான். அவனுக்கு ஒரு பாலம் தேவையாக இருந்தது. 137. தானியேலுக்கு அவனை சிங்கங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு வேலி தேவையாக இருந்தது தேவன் அவனுக்கு ஒரு தூதனைக் கொடுத்தார். பாருங்கள். அது தேவனுடைய அருளப்பட்ட வழியாக இருக்கிறது. தேவையானது என்னவாக இருந்தாலும் தேவன் அருளுகிறார், மேலும் அதை அவருடைய சொந்த வழியில் அருளுகிறார். 138. இப்பொழுது தானியேல் இப்படி கூறியிருந்தால், எப்படி இருக்கும், ஒரு நிமிடம் பொறுங்கள். இப்பொழுது இங்கே எனக்கு முன்பு நின்று கொண்டிருக்கிற அக்கினி ஸ்தம்பத்தை விட சிறந்த வழி ஏதேனும் இருக்கிறதா என்று நினைத்துப் பார்க்கிறேன். அந்த சிங்கமானது அவன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். அவர் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் ஊடாக நேரடியாக வந்திருந்தார். நீர் மட்டும் பெரிய வேலி ஒன்றை கொண்டு என்னைச் சுற்றிலும் அடைக்கமாட்டீரா”? பாருங்கள். அது தானியேல் ஏதோ சில காரியங்களை செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பதாக மட்டுமே இருந்திருக்கும். 139. ஆனால் அவன் தேவனுடைய அருளப்பட்ட வழியை மட்டுமே ஏற்றுக் கொண்டான், தரையில் படுத்து தூங்கச் சென்று இரவு முழுவதும் அமைதியுடன் தூங்கி விட்டான். தேவன் ஒருவழியை அருளியிருந்தார். ஆம் ஐயா, ஓ...நான். 140. அந்த எபிரேய பிள்ளைகள் அங்கே உள்ளே குதித்த போது கொஞ்சம் தண்ணீர் தேவையாக இருந்தது அங்கே அந்த எல்லா நெருப்பையும் வெளியே தள்ள கீழே தீயணைப்புக் குழாய் ஒன்று தேவையாக இருந்தது. ஆனால் தேவன் அவர்களுக்கு நான்காவதாக ஒரு தேவ மைந்தனை (Son Of Man) அருளினார். ஆம் ஐயா. அவர்களுக்கு தேவையிருந்தது. அவ்வளவுதான். 141. "இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், நாம் இதை வெளியே தள்ளி விட நமக்கு ஒரு தீயணைப்புக்குழாய் தேவையல்லவா? வேறு யாரும் அங்கே போனால் அது உதவாது என்று கூறியிருந்தால் என்னவாகும். 142. அவர்கள் தேவனுடைய அருளப்பட்ட வழியை ஏற்றுக் கொண்டனர். ஆகவே அவர் அந்த நெருப்பிலிருந்து அவர்களைக் காத்துக் கொண்டார். அவர்கள் மீது நெருப்பின் வாசனை கூட இல்லாமல் இருந்தது. அவர்கள் தேவனுடைய அருளப்பட்ட வழியில் சென்றனர். 143. அந்த ஞானிகளுக்கு அந்த புதிதாக பிறந்த குழந்தையினிடத்தில் வழி நடத்த ஒரு திசைகாட்டும் கருவி தேவையாக இருந்தது, ஆகவே தேவன் ஒரு நட்சத்திரத்தை அருளினார். பாருங்கள்? அவர்கள் அந்த நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டனர். அவ்வளவுதான் அவர்க ளுடைய தேவையாக இருந்தது. இந்த உலகத்திற்கு ஒரு இரட்சகர் தேவையாக இருந்தது. தேவன் ஒரு குமாரனை அருளினார். ஆமென். 144. இந்த சபைக்கு வல்லமை தேவையாக இருந்தது. தேவன் பரிசுத்த ஆவியை அருளினார். ஒரு நன்னெறி புத்தகத்தை அவர் வழங்கவில்லை. அவர் பரிசுத்த ஆவியை அருளினார். அது தேவன் அளித்த வழியாக இருக்கிறது. அவர் ஒரு போதும், “நீங்கள் மேலே எருசலேமுக்கு செல்லுங்கள், அங்கே குறிப்பிட்ட அளவு கல்வியை பெறும் வரையில், இன்னார் - இன்னார் என்று எழுத்துப்பூர்வமான ஆவணத்தைப் (Document) பெறும் வரையிலும், என்று ஒருபோதும் கூறவில்லை. “உன்னதத்திலிருந்து வல்லமை அளிக்கப்படும் வரை காத்திருங்கள். பரிசுத்த ஆவி உங்கள் மேல் வந்த பிறகு ஜெருசலேம், சமாரியா, சிகாகே, இல்லினாய்ஸ் போன்ற பாருங்கள் உலகம் முழுவதும் எனக்கு நீங்கள் சாட்சிகளாக இருப்பீர்கள்" என்று தான் அவர் கூறினார். அது தேவன் அருளிய ஒரு சாட்சியாக, பரிசுத்த ஆவியாக இருக்கிறது. தேவன் ஒரு நன்னெறி புத்தகத்தை வழங்கவில்லை. அவர் ஒரு ஸ்தாபனத்தை வழங்கவில்லை. “நாங்கள் முழு கிறிஸ்தவர்களாக மாற விரும்புகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். 145. “நல்லது, நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை நீண்ட நாட்கள் காத்திருங்கள், கோட்பாடுகளைக் கற்றுக் கொள்ளும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்றா அவர் கூறினார்? எதையாவது கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் ஒரு போதும் கூறவே இல்லை. "பரிசுத்த ஆவியில் நிரப்பப்படும் வரை” என்றுதான் அவர் கூறினார். 146. அன்றொரு நாள் யாரோ ஒருவர் “மிஸ்டர் பிரான்காம் அவர்களே, நீங்கள் ஏன் ஸ்தாபனங்களில் நம்பிக்கை கொள்வதில்லை” என்று கூறினார். 147. நான் “அந்த ஜனங்களுக்கு விரோதமாக என்னிடம் ஒன்று மில்லை, ஆனால் நிச்சயமாகவே அவர்களுடைய முறைமைகளில் நான் நம்பிக்கை வைப்பதில்லை” என்று கூறினேன். அவர் “நல்லது, அப்படியென்றால்?" நாங்கள் எப்படி பணத்தை செலுத்த முடியும்? நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று கூறினார். அதற்கு நான் “அது தேவனால் அருளப்பட்ட முதலாவது ஸ்தானமாக இருக்கவில்லை" என்றேன். அவர் “நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சார்ந்தவராக இருக்கிறீர்" என்றார். “எதையும் அல்ல” என்றேன். மேலும் “எதை நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள்? என்று கூறினார். "ஒரு இராஜ்ஜியத்தை” என்று கூறினேன். அவர், “எப்படி எங்கே அதை நீங்கள் பெற்றீர்கள்" என்றார். “நீங்கள் அதில் பிறக்கிறீர்கள்” என்று கூறினேன். ஆமென். 148. நீங்கள் எப்படி அந்த இராஜ்யத்தில் பிறக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியின் மூலமாக, அது தேவனுடைய சாட்சியாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையின் மூலம் அவர் சாட்சியை தருகிறார், நாம் மரணத்தினின்று ஜீவனுக்குள் கடந்து சென்று விட்டோம், ஏனென்றால் நாம் தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கிறோம். அது தேவன்.... 149. தேவனுடைய சபைக்கு (Church) ஒரு வழி நடத்துபவர் தேவையாக இருந்தது. அவர் ஒரு பேராயரை கல்வி கற்கச் செய்யவில்லை, மாறாக ஒரு பெரிய ஆசாரியன், போப்-ஐ அல்லது வேறு யாரையும் அனுப்பவில்லை. ஆனால் அவர் பரிசுத்த ஆவியை அனுப்பினார். ஒரு மனிதன் மரிக்கிறான், அவனுடைய முறைமை மரித்துப் போகிறது, மற்ற அனைத்துமே மரித்துப் போகிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நித்திய தேவனாக இருக்கிறார், ஆகவே அவர் மரிக்க முடியாது. அவர் ஒரு நித்தியமான வழி நடத்துபவரை கொடுத்தார் அது பரிசுத்த ஆவியாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும், எப்படி பொது ஜனங்களை சந்திக்க வேண்டும், உக்கிரமான இந்த நாளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வியாதிகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும், எப்படி இதை எதிர்ப்பது, பாவத்தை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களிடம் கூறுவதற்கு அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையாக இருந்தது. மனிதன் எல்லா வழிகளிலும் தன்னை இழுத்துக் கொண்டு கோட்பாடுகள், மற்றும் ஆதாரச் சான்றுகள், ஞானஸ்நானங்கள், மற்றும் எல்லாவிதமான உணர்ச்சிகள், சிறிய நடுக்கங்கள், வேடிக்கையான உணர்வுகள் மற்றும் எல்லாக் காரியங்களிலும் இணைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இன்னுமாக அந்த பரிசுத்த ஆவியானது சபைக்கு (Church) தேவனுடைய அருளப்பட்ட வழியாக இருந்து கொண்டிருக்கிறது. ஆமென். 150. மேலும் பரிசுத்த ஆவியானது தேவனாக இருக்கிறது, மற்றும் தேவன் வார்த்தையாக இருக்கிறார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இந்த வார்த்தையை பரிசுத்த ஆவியானவரே ஜீவனுள்ளதாக கொண்டு வருகிறார். 151. "நான் ஒரு உணர்வை கொண்டிருந்தேன்" என்று நீங்கள் கூறலாம். அது வார்த்தையை நிரூபிக்கமால் இருக்குமானால், அந்த உணர்வை மறந்து விடுங்கள். ஆம் ஐயா. 152.“நல்லது, நான் இதைச் செய்தேன், நான் அதைச் செய்தேன். நான் இந்த முறையில் ஞானஸ்நானம் பெற்றேன், அந்த வழியில் ஞானஸ்நானம் பெற்றேன்" என்று கூறலாம். 153. நீங்கள் என்ன செய்திருந்தாலும் நான் கவனத்தில் கொள்ள மாட்டேன். பரிசுத்த ஆவி உங்கள் மேல் இருந்தால் இந்த வார்த்தை உங்கள் வழியில் நிரூபிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் “உலகம் முழுவதும் விசுவாசிப்பவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் மேலும் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் " என்று இயேசு கூறியுள்ளார். 154. இரண்டாயிரம் வருடங்கள்! அது சுமார் முந்நூறு வருடங்களாக சென்று கொண்டிருந்தது. ஒரு சமயம் அவர்களுக்கு ரோம் நகரத்தில், நிசாயா என்ற இடத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் இருந்தது. அவர்கள் சில காரியங்களை உள்ளே நுழைக்க விரும்பினார்கள். அதன் பிறகு மார்டின் லூதர் என்கிற கர்த்தருடைய தூதன் செய்தியைக் கொண்டு வந்தார். அதன் பிறகு அவர்கள் வேறொன்றை உள்ளே நுழைத்தனர். ஆகவே பிறகு ஜான் வெஸ்லிக்கு பிறகு வேறொன்றை உள்ளே நுழைத்தனர். அவர்கள் இந்த இடத்தை அடையும் மட்டாக மனிதனுடைய போதனை களாலும், நெறிமுறைகளாலும் சபைகள் கலப்பினமாக மாறி ஒரு வீழ்ச்சியை சந்திக்கும் வரை அவர்கள் அப்படியே அந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்தனர். 155. இந்தக் கடைசி நாட்களில் சபைக்கு ஒரு வேதப்பூர்வமான அடையாளம் தேவையாக இருக்கிறது. அதற்கு ஏதோ ஒரு காரியம் தேவையாக இருக்கிறது. 156. வெவ்வேறு ஸ்தாபனங்களைப் பாருங்கள், திரித்துக் கூறுதல்கள்; நாம் ஜெப வரிசைக்கு செல்லும் முன்பாக, இந்த வேதவசனங்களை திரித்துக் கூறுதல்களை பாருங்கள். நமது வித்தியாசமான ஸ்தாபனங்களைப் பாருங்கள், நமது பெந்தெகொஸ்தேயின் வழிகளை நினைத்துப் பாருங்கள், நமது பாப்டிஸ்ட்களை நினைத்துப் பாருங்கள். நமது சுயாதீன மார்க்கத்தாரையும் கூட, எதுவானாலும் ஒரு நபருக்கு எங்கு நிற்க வேண்டும் என்று தெரியவில்லை. 157. இன்று சபைக்கு ஒரு வேதப்பூர்வமான நிரூபணம் தேவையாக இருக்கிறது. பரிசுத்த யோவான், 14-ம் அதிகாரம் 12-வது வசனத்தில் இயேசு என்ன கூறியிருக்கிறார்? “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இன்னும் பெரிய கிரியைகளும் செய்வான்.” கவனியுங்கள், "தீர்க்கத்தரிசியாகிய யோனாவின் நாட்களில் நடந்ததைப் போல, மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் அப்படியே நடக்கும்" பாருங்கள்? மேலும் யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இரவு பகல் இருந்தான். மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தான். அது இந்த வஞ்சகமும், விபச்சாரமும் நிறைந்த சந்ததிக்கு அடையாளமாக இருக்கும். 158. இப்பொழுது, ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட உயிர்த் தெழுதலின் அடையாளத்துடன் நாம் இந்த கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்னுமாக ஜனங்கள் சாலையிலிருந்து விலகி இந்தப் பக்கமாகவும், அந்தப் பக்கமாகவும் விலகிச் சென்று என்ன செய்வது என்று அவர்கள் அறியாமல் இருக்கின்றனர். ஆனால் இயேவு அவர்களிடம் "லோத்தின் நாட்களில் சோதோமில் நடந்ததைப் போல மனுஷகுமாரன் வருகையிலும் அப்படியே நடக்கும்” என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். 159. அதை இந்த நாளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் ஆதியாகமம் 6ம் அதிகாரத்தில் எப்படி "மனிதன் கீர்த்தி வாய்ந்தவனாவும், ஸ்திரீகள் மிகவும் அழகுள்ளவர்களாகவும்” இருந்தனர் என்று பாருங்கள். அந்த நாளில் இருந்து பூமியில் எப்பொழுதும் இல்லாதவாறு நாம் இன்று மிகவும் அழகான ஒரு கூட்ட ஸ்தீரிகளை உடையவர்களாக இருக்கிறோம். ஸ்திரீகள் பல வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட மிகவும் அழகாக இருக்கின்றனர். அவர்கள் வித்தியாசமான காரியங்களில் தங்களை மிகவும் அழகாக ஆக்கிக் கொள்கின்றனர். பல விதமான வித்தியாசமான வர்ணங்கள், முகப்பூச்சு பவுடர்கள், பொருத்திக் கொள்ளும் பொருட்கள், தலைமுடி அலங்காரங்கள் இப்படி ஒவ்வொரு காரியமும் மற்றும் ஒழுக்கமற்ற உடைகள், மற்ற காரியங்கள், இன்னும் அவர்களை கவர்ச்சி உடையவர்களாக மாற்றிக் கொள்கின்றனர். 160. ஒரு மனிதன் நேற்று என்னிடம் வந்து, சகோதரர் பிரான்காம் “எனக்கு பதினாறு வயது பையன் இருக்கிறான், பன்னிரெண்டு வயது பையன் இருக்கிறான், நான் அவர்களை அழைத்துக் கொண்டு தெருவில், ஆடை அவிழ்ப்பு நடனம் புரிவோர் இருக்கும் தெருவில் சென்றேன். மேலும் அவர் “அந்த பையன்கள் சிறிய பையன்களாக இருக்கின்றனர்” நான் அவர்களிடம் என்ன கூற முடியும்?” என்றார். 161. "ஐயா, எனக்கு தெரியாது. அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு செல்லுங்கள், பரிசுத்த ஆவியினால் அவர்கள் நிரப்பப்பட்டு தங்கள் தலைகளை இந்த நவீன ஆடை அவிழ்ப்புகளிலிருந்து திரும்பி அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறினேன். 162. ஞாபகம் கொள்ளுங்கள், தேவ புத்திரர்கள் மனுஷ குமாரத்திகள் மேல் கவனம் வைத்த போது அவர்கள் அழகுள்ளவர்கள் என்று கண்டு தங்களுக்கு பெண் கொண்டார்கள். இங்கே இங்கிலாந்து முழுவதும் உள்ள பெரிய ஊழலைப் பாருங்கள், ஜர்கிய நாடுகள் முழுவதும் தொலைபேசி வழியாக அழைக்கப்படும் விபச்சாரப் பெண்கள் இன்னும் பலகாரியங்களை பாருங்கள், ஓ, அது மிகவும் பயங்கர மானதாக இருக்கிறது. அது பிரபலமான மனிதனாக இருக்கிறது. நாம் சரியாக அந்த நேரத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறோம், அந்த சிவப்பு விளக்குகள் எல்லா இடங்களிலும் விட்டுவிட்டு பிரகாசிக்க துவங்கி விட்டன. எரிந்து கொண்டிருக்கின்றன. கர்த்தருடைய வருகை வந்து கொண்டி ருக்கிறது. மேலும், இயேசு "சோதோம் சுட்டெரிக்கப்படுவதற்கு முன்பு இருந்ததைப் போல மனுஷ குமாரனின் வருகையிலும் அது அப்படியே நடக்கும்" என்று கூறினார். 163. இந்தப் பெண்கள் அப்படியே ஆகிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் அவர்கள் மீது ஒரு தீய ஆவியானது இருப்பதை அவர்களால் உணர முடியவில்லை. ஒரு பெண் ஏன் அப்படிப்பட்ட ஆடைகளை அவிழ்த்து தன்னைத்தானே வெளியில் காட்ட வேண்டும். அவள் கெட்டவளாக இருக்க விரும்பவில்லை, அவர்கள் அவர்கள், அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டார்கள், மேலும் அதை அவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அது அந்தக் காலத்தில் இருந்ததைப் போலவே எல்லா இடங்களிலும் பெண்களுடைய மாம்சம் கவர்ச்சியாக வெளியில் காட்டப்படுகிறது. தேவபுத்திரர்களுடைய மனம் சரியாக வெளியில் ஓடுகிறது. ஆகவே அதன் பிறகு ஒரு சோதோம் கொமோரா-வின் சட்டமானது அதிலிருந்து அவளைத் தடுக்கிறது. என்ன ஒரு அவமானம். நம் அரசாங்கம் அது போன்ற காரியங்களுக்கு துணையாக நின்று கொண்டிருக்கிறது. 164. நான் சிறிது காலம் அந்த நாட்டின் ஆளுநராக(Governor) இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த மாதிரி ஆடைகள் அணிந்திருக்கும் பெண்ணை நான் எப்பொழுதாவது காண நேர்ந்தால் அவள் வாழ்நாள் முழுவதும் பெண்கள் சிறைச்சாலைக்குள் தான் செல்ல வேண்டும். பிறகு அவளால் ஒரு போதும் முடியாது. (கை தட்டல்)ஆமாம். அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணையும் மனிதனையும் பிடிக்க முடிந்தால் மருத்துவர்கள் மூலம் பொது வெளியில் வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் இருவரும் மலட்டுத்தன்மை உடையவர்களாக மாறிவிடுவார்கள். அவ்வளவு தான் நாம் அதை செய்வோம். 165. தண்டனை இல்லாத சட்டம் என்னவாக இருக்கிறது? அந்த தண்டனை கொஞ்சம் பழையதாக இருக்கிறது. தேவனுடைய நியாயப் பிரமாணம் மரணமாக இருக்கிறது. பாவமே மரணமாக இருக்கிறது. அது சரியே, நமக்கு கடுமையான சட்டங்கள் தேவையாக இருக்கிறது. ஓ, நான், ஆனால் நீங்கள் விரும்பும் வழியில் செல்லக் கூடிய. முழுக் காரியத்தையும் சிதைத்துப் போடுகிறதைத்தான் நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். 166. சபையே, ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்கு சீக்கிரம் திரும்பு! விலகி அதனோடு மட்டுமே வாழுங்கள். காரணம் தேவனுடைய ஜனங்கள் அதன் மூலம் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றன. 167. தேவன் இந்த சபைக்கு (Church) வேதப்பூர்வமான அடையாளத்தை வாக்கு கொடுத்திருக்கிறார் உயிர்த்தெழுதலானது மீண்டும் நடக்கும் இயேசு கிறிஸ்துவும், அவருடைய சபையும் (Church) ஒன்றாக மாறும் என்று அவர் கூறியிருக்கிறார். அதை வாக்குப் பண்ணியுள்ளார். அது உண்மை என்று இப்பொழுது நாம் அறிந்திருக்கிறோம். 168. இப்பொழுது, அங்கே விசுவாசம் திரும்பவும் அளிக்கப்படுதல் இருக்கும் என்று அவர் வாக்கு பண்ணியுள்ளார். "பரிசுத்த வான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடுங்கள்” என்று யூதாவின் புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம். இப்பொழுது நமக்கு மல்கியா அதிகாரத்தில் அவர் எப்பொழுதும் செய்த அதே முறையில் நாம் மீண்டுமாக மூல விசுவாசமானது திரும்ப அளிக்கப்படும் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. ஓ... ஓ...நான். மூலவித்திற்குத் திரும்புங்கள், அதே கோட்பாட்டிற்குள் திரும்புங்கள் வார்த்தைக்கு வார்த்தை, வல்லமையின் மேல் வல்லமை, ஆவியினால் அதே காரியத்திற்கு ஆதியில் இருந்த அந்தத் துவக்கத்திற்கு, இயேசுகிறிஸ்து ஜீவனுள்ள பிரசன் னத்திற்குள் அற்புதங்களுடனும் அடையாளங்களுடனும் திரும்புங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் இன்னுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நேற்றும், இன்றும், மற்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். 169. "முப்பது நிமிடங்களுக்கு பிறகு என் மீது எதையாவது எறிந்து விடு அப்பொழுது நான் பிரசங்கிப்பதை நிறுத்தி விடுவேன்” என்று நான் பில்லியிடம் கூறியிருந்தேன். இப்பொழுது நான் அந்த நேரத்தைக் கடந்து விட்டேன். கவனியுங்கள், சற்று எனக்குப் புரிகிறது. 170. நமக்கு அதிக நேரமில்லை என்று எனக்குத் தெரியும், நேரம் வந்துவிட்டது. 171. நண்பர்களே, “நல்லது, உண்மையாகவே அது எனக்கு பிடித்திருந்தது, அது கொஞ்சம் சூடாக இருந்தது ஆனால் நான் அதை அனுபவித்தேன்" என்று சொல்லி கூட்டத்திற்கு வெறுமனே வந்து விட்டுப் போகாதீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். 172. நேர்மையாக இருங்கள். அதற்குள்ளாக அசைந்து செல்லுங்கள். பாவங்களை அறிக்கை செய்யுங்கள். உங்களை சுத்தப் படுத்துங்கள். உங்கள் இதயத்தில் சிறிய சந்தேகங்களும் பதட்டங்களும் இருந்தால் கூட நீங்கள் ஜெபவரிசைக்கு வராதீர்கள் எனக்கு சுத்தம் வேண்டும். நம்முடைய பாவ அறிக்கைகள் ஒரு சுற்றுவட்டச் சாலையாக (Roundabout way) இருக்கிறது. 173. சில வாரங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெண்ணுடன் எனக்கு நேர்காணல் இருந்தது, அவள் அங்கே அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது அது வேறொரு மனிதனுக்கு சொந்தமான குழந்தையாக இருந்ததை நான் கண்டேன். மேலும் அவள் இரண்டு பையன்களுடன் வசித்து வந்தாள், அவள் இந்த ஒரு பையனை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு அவனை திருமணம் செய்து கொண்டாள், காரணம் அவனை அவள் மிகவும் விரும்பினாள். மேலும் அந்த சிறிய குழந்தை அவனுடையதாக இருந்தது. ஆகவே அந்தச் சிறிய குழந்தை வேறு ஒருவருக்கு சொந்தமானது என்று அவளுக்குத் தெரியும். ஆகவே அவள், “நான் அதை அறிக்கை செய்து விட்டேன்" என்று கூறினாள். 174. ஆமாம் நீ "இங்கே கூறிய விதம் இப்படி இருக்கிறது. என்றேன். 'ஓ, அன்பே, ஓ. அன்பே நீ சில காரியங்களை நினைத்துக் கொண்டி ருந்தாய். உனக்குத் தெரியும், பழைய ஜான், பழைய ஜான் பையனை, இந்த சிறிய குழந்தை வேறு யாருக்கோ சொந்தமானது என்று உன்னிடம் கூறினால் எப்படி இருக்கும்? ஹி.. ஹி.. உன்னால் அதை நம்ப முடியாது இல்லையா? சரி. அது அப்படி நடந்திருந்தால்தான் என்ன? ஜான், இன்றிரவு நாம் ஹம்பர்கர் [Humburgar) சாப்பிட வெளியில் போகலாமா?” அது அறிக்கை பண்ணுதல் அல்ல. நீ தரையில் முழங்கால் மடியிட வேண்டும் என்று கூறினேன். 175. ஜனங்கள் தேவனிடத்திற்கு வருவது இப்படித்தான் இருக்கிறது. "ஓ, தேவனே, நீர் மிகவும் நல்லவர், நான் விரும்புகிற எதையும் செய்ய என்னை அனுமதிப்பீராக” அதை நீங்கள் அப்படி விசுவாசிக்காதீர்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்து பாவ அறிக்கை செய்து சுத்திகரிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தைக்கு திரும்பி வராத வரையில் நீங்கள் இன்னுமாக குற்றமுள்ளவராகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்ய முடியாது. 176. நீங்கள் அந்தக் காரியத்தை கிழித்து கீழே எறிந்து விட வேண்டும். ஜனங்கள் உண்மையாகவே தெய்வ பயத்துடன் வந்து, உத்தமமாக, அவர்களுடைய முழங்கால்களில் இருந்து. பதில்கள் கிடைக்கும் வரையிலும் அதில் நிலைத்து நின்று, உங்கள் இருதயத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் நுழைய அனுமதித்து, உங்கள் எல்லாப் பாவங்களையும் உங்கள் அவிசுவாசத்தையும் அறிக்கை செய்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேவன் அவரால் முடிந்த எல்லாவற்றையும் அனுப்பியுள்ளார். 177. சகோதரர் வேயில் (Brother Vayle) சற்று முன்பு கூறியதைப் போல, அவர் அதை முதலில் எப்படி நிரூபித்து காண்பித்தார். பாருங்கள்? கிணற்றருகே அந்த ஸ்திரீயைப் பார்த்த போது அவர் மேசியாதான் என்று எப்படி அவள் அறிந்து கொண்டாள். அவளிடம் என்ன தொல்லை இருந்தது என்று அவளிடம் கூறினார். ஆறு கணவர்களுடன் மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயிடம், "ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஒருவனும் உன் கணவன் அல்ல” என்று அவளிடம் சொன்னார். அந்த நிலையில் அவள் ஓடிக் கொண்டிருந்தாள். 178. ஆனால், அவளுக்கு அது கூறப்பட்ட பொழுது தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்கான பட்டயமாக, இருதயத்தின் சிந்தனைகளை பகுத்தறியத்தக்கதாக இருந்ததை அவள் கண்டு கொண்டாள். அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கத்தரிசியாக இருக்க வேண்டும்" என்று கூறினாள். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. ஐயா, "நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் மேசியாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் அந்த மேசியா வரும் போது அவர் என்ன செய்வார் என்பதையும் அறிந்திருக்கிறோம்." என்று கூறினாள். “நானே அவர்” என்று இயேசு கூறினார். 179. அந்த நகரத்தில் இருந்த ஜனங்கள், சீகார் பட்டிணத்தின் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தனர். அவர் அதை மீண்டும் செய்ய வேண்டியதில்லை. ஒரு முறை அதைச் செய்தார், மேலும் அந்த ஸ்திரீயானவள் அப்படிக் கூறினதால் ஒவ்வொரு மனிதனும், அவரில் விசுவாசம் வைத்தனர். அவளுடைய சாட்சி அவளை அப்படி மாற்றிப் போட்டது. அதனால் அவர்கள் அதை நம்பமால் இருக்க முடியவில்லை. ஓ, மனிதனை மனந்திருப் புதலுக்குள்ளாக கொண்டு வருகின்ற அப்படிப்பட்ட சாட்சிகளைத் தாரும், நேர்மறையான சாட்சிகளைக் கொண்ட புருஷர்களையும், ஸ்திரீகளையும் எங்களுக்கு தருவீராக. அவர்கள் இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் கொண்டனர். இப்பொழுது, அந்த அடையாளத்தின் மூலம் அவர் மேசியா என்பதை நிரூபித்தார். 180. தேவனே, அவருடைய ஆவியுடன், அதே அடையாளங்கள் மூலமாக அவர் இன்னும் மெசியாவாக இருந்து கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்க எனக்கு உதவி செய்வீராக. ஆமென். தேவனுடைய வார்த்தையினால் மட்டுமே நாங்கள் உயிர் வாழ்வோமாக. அதைச் செய்வேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார். 181. இப்பொழுது இந்த கடைசி நேரங்களில் தேவனுடைய அருளப்பட்ட வழியை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சுகவீனமாக இருப்பீர் களென்றால் தேவன் ஒரு வழியை உடையவராக இருக்கிறார். இயேசு கிறிஸ்துவே அந்த அருளப்பட்ட வழியாக இருக்கிறார். நீங்கள் பாவியாக, இன்றிரவு அவிசுவாசத்துடன் சரியானபடி வாழ முடியாமல், சமாதானம் இல்லாமல், இருக்கலாம், இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரு அருளப்பட்ட வழியாக இருக்கிறார். அவரை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அவர் நேற்றும், இன்றும் மற்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியாக இருப்பவரும் அவரே, பரிசுத்த ஆவியானவர் இயேசுவுக்குள் இருக்கிறார். (கிறிஸ்து) ஆவியின் வடிவில் இருக்கிறார். "கொஞ்ச காலத்தில் இந்த உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களோடு இருக்கிறேன், உங்களுக்குள்ளும் இருக்கிறேன்...." அந்த பரிசுத்த ஆவி; கிறிஸ்து அதை அழைத்துக் கொண்டிருக்கிறார். பாருங்கள்? கிறிஸ்து, தேவன், பரிசுத்த ஆவியாகிய அவருக்குள், அவருடைய சபைக்குள் (Church) இருந்தார். உலகத்தின் முடிவு பரியந்தமும்." தேவனுடைய வார்த்தை. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது, ஆனால் இன்னுமாக நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் உங்களுடன் இருக்கப் போகிறேன் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை செய்வான். உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுக்கு இருப்பேன்” அவரை விசுவாசித்து கொண்டிருக்கிற அவருடைய பிள்ளைகளுக்கு ஒருவழியை உடையவராக இருக்கிறார். இயேசு கிறிஸ்துவே அந்த வழியாக இருக்கிறார், நேற்றும், இன்றும், மற்றும் என்றும் ஒரு நிமிடம் நான் தலைகளை வணங்குவோம். 182. உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் இந்த பொழுதில் அவரே வழியாக இருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? இதை விசுவாசிக்க விரும்புகிற யாராவது, மற்றும் இதை இன்னுமாக ஏற்றுக் கொள்ளாமல் யாரேனும் இருக்கிறீர்களா? சகோதரனே, உன்னுடைய கரங்களை உயர்த்த மாட்டாயா? இன்றிரவு இந்த பழைய அரங்கத்தில் இருக்கின்ற நீங்கள் நேர்மையாக இருங்கள். “சகோதரர் பிரான்காம் அவர்களே எனக்காக ஜெபியுங்கள் என்று கூறுங்கள், நான் இப்பொழுது இருக்கின்ற இந்த நிலையில் தேவனை சந்திக்க விரும்பவில்லை? ஆகவே நினைவு கூறுங்கள் என்று சொல்லுங்கள். 183. மற்றொரு நாள் நாங்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து வந்த தொலைபேசியை எடுத்து அந்த உரையாடலில் குறுக்கிட்டோம். அந்த ஸ்திரீயானவள் உள்ளே வந்தான், ஒரு மனிதன் அவளுக்கு பின்னால் இருந்து அவளைக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தான். அந்த ஸ்திரீ ஒரு வேளை ஒரு கிறிஸ்தவ பெண்மணியாக இருக்கலாம். ஆகவே "உன்னுடைய கணவர் இன்னும் தூங்கிக் கொண்டு இருக்கிறாரா? என்று அவன் கேட்டான்.” “ஆமாம்” மேலும் “அவர் எப்பொழுதாவது கண்டுபிடித்தால், நாம்...என்றான்." எனக்கு அது எந்த வித்தியாசத்தையும் செய்யாது. மேலும் ஒரு சிறிய குழந்தை அழுது கொண்டிருந்தது. 184. நீங்கள் உணருகிறீர்களா? உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இது அழுக்கும், அசுத்தமுமான, விபச்சார உலகமாக இருக்கிறது. அவள் முடிவில் இருக்கிறாள். தேவனோ சென்று கொண்டிருக்கிறார்... 185. இந்த நாட்களில் ஒன்றில் சிகாகோ நகரத்தில் ஒரு கட்டிடத்தின் மேல் ஒரு கட்டிடம் இருக்காது, அல்லது எங்கும் ஒன்றுமே இருக்காது. தேவன் ஆறாம் முத்திரையை உடைத்து பூமியின் மீது தன்னுடைய உக்கிரமான கோபத்தை அவிழ்த்து விடுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அதைச் செய்வதற்கு முன்பு மணவாட்டி சபையானது (Church) சென்று விட்டிருக்கும் ஸ்தாபன் சபையானது (church) செல்ல முடியாது அவள் உபத்திரவத்தின் வழியாக செல்ல வேண்டும். மணவாட்டியானவள் சென்று விட்டிருப்பாள். அவளுடைய சிறிய மனைவியானவள் அதன் வழியாக செல்ல மாட்டாள். 186. இன்றிரவு நீங்களும் அவளைப் போல ஒரு அங்கத்தினராக இருக்க விரும்பவில்லையா? நீங்கள் அப்படி, ஜெபத்தில் நினைவு கூற வேண்டும் என்று விரும்பினால், தலைகள் வணங்கியிருக்கும் இந்த வேளையில் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். தேவன் உங்களை ஆசீாவதிப்பார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களை..உங்களை...மற்றும் உங்களை.. 187. எங்கள் பரலோகப் பிதாவே, நான் செல்லக்கூடிய எல்லா வார்த்தைகளும் உம்முடைய ஒரு வார்த்தையுடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை. நீர் கூறியதை மேற்கோள் காட்டும் ஒரு மனிதனாக மட்டுமே நான் இருக்கிறேன். கரங்களை உயர்த்திய இவர்களுக்காக நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அதை அருளுவீராக... 188. அந்த மகத்தான தரிசனமானது இன்று காலையில் என்னை கிழித்துப் போட்டது, கர்த்தாவே, நான் இன்னுமாக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகவே நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும். அதற்காக ஜெபிக்கிறேன், கர்த்தாவே என்னை அமைதிப் படுத்துவீராக.. நான் பதட்டம் உள்ளவனாக இருக்கிறேன். ஆகவே நான் அதைக் கேட்கிறேன், எனக்கு உதவி செய்வீராக... 189. இன்றிரவு, சில காரியங்களுக்காக கைகளை உயர்த்தியவர்கள் இந்த கட்டிடத்திற்குள் தங்கி இருந்தால் அந்த மகா பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது அவர்களிடம் பேசுவாராக, அவர்கள் இனிமை நிறைந்தவர்களாக உம்மிடம் வரட்டும். பீட அழைப்பை ஜனங்களுக்கு கொடுப்பது வழக்கம் என்பது எனக்குத் தெரியும், அது சரியானது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் வேத வாக்கியங்களின்படி, "விசுவாசித்தவர்கள் அனைவரும் ஞானஸ் நானம் பெற்றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 190. இந்த ஜனங்கள் விரைந்தோடி வந்து உம்மேல் விசுவாசம் கொண்டவர்களாக, அவர்களுடைய பாவங்களை அறிக்கை செய்து இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அவர்களுடைய மன்னிப்புக்காக ஏற்றுக் கொண்டு அதன்பிறகு எழுந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு தங்கள் பாவங்களை கழுவிக் கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறேன். பின்னர் அவர்கள் அவருடைய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக முத்திரையிடப் பட்வர்களாக, அந்த வாழ்ககையானது அவர்களின் முழு சுபாவத் தையும் மாற்றி, புதிய நம்பிக்கையை கொடுக்கட்டும், அவர்கள் அதை கவனித்துப் பார்த்து ஒரு சிறைக்கைதியாக ஆகட்டும், அவர்களுடைய விருப்பங்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் மாறி ஒரு சிறைக் கைதியாக மாறுவார்களாக. 191. அந்த மகத்தான பரிசுத்த பவுலைப் போல ஒரு போதகராக இருக்க விரும்புங்கள். அவன் ஒரு மகத்தான மனிதனாக இருக்க விரும்பினான். அவனுடைய தாயும், தந்தையும் அப்படி இருப்பதற்கு அவனுக்கு பயிற்சி அளித்திருந்தனர். அந்த அக்கினி ஸ்தம்பத்தை சந்தித்த பிறகு அவன் அங்கிருந்து வனாந்தரத்திற்கு பின்புறம் சென்றான். அந்த நாளில் "முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்" என்று அவனுக்கு கூறப்பட்டது. “அவனுடைய பெயரை “சவுலே, சவுலே" என்று அழைத்தது. ஒரு அக்கினி ஸ்தம்பம் எப்படி அவனுடைய பெயரை அழைக்க முடிந்தது? ஆனால் அவர் “நான் இயேசு” என்று கூறினார். இயேசு பூமியில் இருந்த போது அதைத்தான் செய்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். அந்த அக்கினிஸ்தம்பமானது எகிப்திலிருந்து வனாந்தரத்தின் வழியாக தம் மக்களை அழைத்துச் சென்ற கிறிஸ்து என்பதையும் மேலும் அது இன்னுமாக அபிஷேகம் பண்ணப்பட்டதாக இருந்ததையும் அவன் அறிந்திருந்தான். 192. ஆகவே, கர்த்தாவே இன்றும்கூட நீர் அதே போல் இருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே அவர்களுடைய இருதயத்தில் சமாதா னத்தை அருளுவீராக. இந்த சபையையும் இதனுடன் இணைக்கப் பட்டிருப்பவர்களையும், மேலும் எங்கள் வாசல்களில் இருக்கும் அந்நியர்களையும் பரிசுத்தப்படுத்துவீராக, இதை இயேசுவின் நாமத்திற்காக நான் இதைக் கேட்கிறேன். 193. மேலும், பிதாவே இந்த வியாதியஸ்தரை குணமாக்க வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். நான் கூறியதை சத்தியம் என்பதை உறுதிப்படுத்திவீராக. என்னுடைய நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. கர்த்தாவே, நான் வயதானவனாக ஆகிக் கொண்டி ருக்கிறேன். ஆகவே என்னால் முடிந்தவரை ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். மேலும் தேவனே இன்றிரவு இந்த ஜனங்கள் காணும்படியாக எல்லாம் வல்ல சர்வ வல்லமையுள்ள அவர் தாமே எங்கள் மத்தியில் இறங்கி வந்து அவர் நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறீர் என்பதை கர்த்தாவே. “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை இந்த ஜனங்கள் காணும்படியாக இதை அருள்வீராக. மேலும், அவநம்பிக்கையை அவர்களின் இருதயத்திற்குள் கொண்டுவரும் பெரிய தொற்று நோய்கள் நோய்க்கிருமிகள் மூலம் தங்களை கலப்பு செய்யாமல், ஆனால் ஆவியின் வல்லமையில் அந்த தொற்றுநோய் கிருமியை வெளியில் எடுத்து விட்டு, நித்திய ஜீவக் கிருமியானது அவர்களுக்குள் வாழட்டும், இதனால் அவர்கள் முழுமையாக கிறிஸ்துவுக்குள் வளர்ந்து இந்த கடைசி நாட்களில் அவரும் அவருடைய மனைவியாகவும் ஒன்றாக இருக்க முடியும். இதை அருளும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென். 194. கைகளை உயர் தூக்கிய நீங்கள் இப்பொழுது விசுவாசியுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, உங்களுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களென்றால், அவருடைய அந்த இரத்தம் தனிப்பட்ட முறையில் உங்கள் பாவத்திற்கான பரிகாரமாக இருக்கிறது என்று அவரை விசுவாசியுங்கள், பிறகு இங்கு இருக்கின்ற சில ஊழியக்காரர்களை ஞானஸ்நானத்திற்காக பார்க்க விரும்புகிறேன், பிறகு அங்கே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். 195. ஜெப அட்டைகளை வைத்திருக்கும், வியாதி, மற்றும் பாதிக்கப் பட்டவர்களுக்காக எண் ஒன்றிலிருந்து துவக்குவோம், அவர்களில் சிலரை இங்கே மேடைக்கு வரத்துவங்கட்டும் எண் ஒன்றிலிருந்து பதினைந்து வரையிலும் உள்ளவர்கள். நான் ஏறக்குறைய பதினைந்து, இருபது நிமிடங்கள் தாமதமாகச் சென்று கொண்டிருக்கிறேன். நான் பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு முன்பே வெளியில் சென்றிருக்க வேண்டும். இப்பொழுது நாம் ஜெபிப்போம், எல்லோரும் தங்கள் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம் 196. எண் ஒன்று. ஜெப அட்டை யாரிடத்தில் இருக்கிறது. எண் ஒன்று இரண்டு உங்கள் கரங்களை உயர்த்துங்கள் (எழுந்து நிற்க முடியுமானால் எழுந்து நில்லுங்கள் என்று சகோதரர் லீ வேயில் (Lee Vayle) கூறுகிறார்) எங்களால் பார்க்க முடியவில்லை கூடுமானால் எழுந்து நில்லுங்கள். இன்னும் கூட நாங்கள் சரியாகப் பார்க்க முடியவில்லை. வெளிச்சமானது நன்றாக இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. ஜெப அட்டை எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 197. நம்முடைய... ஒரு சகோதரி இங்கே இருக்கிறாள், நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது நம்மில் மீதமுள்ளவர்கள் தலைகளை தாழ்த்தியிருக்கும் போது ஒன்றிலிருந்து பதினைந்து வரை இப்பொழுது எழுந்து நில்லுங்கள். இங்கே மேலே வாருங்கள், மேலே வாருங்கள் எண் ஒன்றிலிருந்து பதினைந்து வரை, நாம் தலைகளை தாழ்த்தி இந்த சகோதரிக்காக ஜெபம் செய்வோம், அவள் சுகவீனமாக இங்கே இருக்கிறாள். திருமதி. வே (way) இங்கே இருக்கிறார், இப்பொழுது மீண்டும் நாம் அவளுக்காக ஜெபம் செய்வோம். இங்கு இன்றிரவு வெப்பம் மிகவும் மோசமாக இருக்கிறது. என்னுடைய காலணிகளுக்குள் (Shoes) வெளியே வியர்வையானது வழிந்து கொண்டிருக்கிறது. நம் அனைவரது தலைகளையும் கீழே தாழ்த்தி இப்பொழுத நாம் ஜெபிப்போம். 198. எங்கள் பரலோகப் பிதாவே உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தாரும் இரக்கத்தையும், கருணையையும், சமாதானத்தையும் எங்கள் சகோதரிக்கு தந்து உதவி செய்வீராக, தேவனே, அவள் நோய் வாய்ப்பட்டும், தேவையுள்ளவளாகவும் இருக்கிறாள். அந்த பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து, மீண்டும் அவளுக்கு நல்ல உடல்நலத்தை தருவாராக. அவள் சுகவீனமாக இருக்கிறாள்; சபைக்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறாள். அவள் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறாள். அதை நாங்கள் காண்கிநோம். தேவனே சுகப்படுத்துவீராக. இந்த ஆசீர்வாதங்களுக்காக நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென். 199. எல்லாம் சரி, கர்த்தர் தாமே இப்பொழுது ஆசீர்வதிப்பார். விசுவாசியுங்கள் சகோதரி வே அவர்களின் தலை அசைவதை பார்த்தேன். உங்களில் யாராவது அவளை வெளியே கொண்டு சென்று கொஞ்சம் காற்றோட்டம் இருக்கின்ற இடத்தில் இருக்கட்டும். அவள் கொஞ்சம் காற்றோட்டத்தை பெற்றுக் கொள்வாள். இது மிகவும் மோசமான வெப்பமாக இருக்கிறது. நீங்கள் இங்கே இருப்பீர்களானால் இந்த நேரம் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வீர்கள். 200. இப்பொழுது, எத்தனை பேர் பெற்றுக் கொண்டீர்கள்? (சகோ.வேயில் பத்துப்பேர் என்று கூறுகிறார்] ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு...சரி. 201. நாம் ஜெபவரிசையை துவங்கலாம். இப்பொழுது எல்லோரும் எவ்வளவு பயபக்தியுடன் இருக்க முடியுமோ இருங்கள். ஒவ்வொருவரும் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது பியானோ இசைப்பவள் ஒரு சுருதியை நமக்கு இசைக்கட்டும். நீங்கள் விரும்பினால் விசுவாசிக்க மாத்திரம் செய், விசுவாசிக்க மாத்திரம் செய், எல்லாம் கைகூடும். விசுவாசிக்க மாத்திரம் செய். என்ற பாடலை இசையுங்கள். 202. அது நன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இப்பொழுது ஜெபத்தில் இருக்கின்றனர். எல்லாம் சரியே. இனிமேலும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம். அப்படி செய்யாதீர்கள். ஜனங்கள் இங்கும் அங்குமாக சென்று கொண்டிருக்க வேண்டாம். அப்படிச் செய்யாதீர்கள். பாருங்கள் காரணம் இது மிகவும் ஆபத்தனதாக இருக்கிறது. பாருங்கள் மிக மிக ஆபத்தானதாக இருக்கிறது. சரி. இப்பொழுது ஒவ்வொருவரும் அமைதியாக இருந்து ஜெபியுங்கள், மேலும் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள். 203. (“நம்மிடத்தில் நான்கு பேரை காணவில்லை” என்று சகோ. வேயில் கூறுகிறார் [என்ன சொல்கிறீர்கள்?] நல்லது, அவர்களுக்கு விடுத்த அழைப்புக்கு அவர்கள் பதில் கூறவில்லை. சரி எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் அழைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் காணாமல் போய்விட்டனர். சரி. 204. எத்தனை பேர்கள் இல்லை இரண்டு, எண் இரண்டு யாரிடம் எண் இரண்டு ஜெப அட்டை உள்ளது? இங்கு ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள் பேசும் மக்கள் இருக்கிறார்களா? ஜெப அட்டை எண் இரண்டு 205. அந்தப் பையன் அந்த அட்டைகளை கலந்து வெளியே அவர்களுடைய கைகளில் கொடுக்கிறான் யாராவது அதைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். நீங்கள் வரவில்லை என்றால் அதை எடுத்துக் கொள்ளாதீர்கள். பாருங்கள்? நீங்களாகவே வந்திருக்க வேண்டும். 206. ஜெப அட்டை எண் இரண்டு இருக்கிறீர்களா? சரி இங்கே இல்லையென்றால், நாம் தலைகளை தாழ்த்துவோம். வெப்பமானது மிகவும் மோசமாக இருக்கிறது. மிக மிக அதிகமாக இருக்கிறது. மேலும் இங்கே இந்த பெண்மணியிடம் அது ஒருவேளை இருந்திருக்கலாம். பெண்மணியே, நீங்கள் எண் இரண்டு ஜெப அட்டையை வைத்திருக்கிறீர்களா? உங்களிடம் ஜெப அட்டை எண் இரண்டு உள்ளதா? இருக்கலாம். அவள் ஒரு நார்வே நாட்டைச் சேர்ந்தவளாக அல்லது ஏதோ ஒன்றை சார்ந்தவளாக இருக்கலாம். ஆகையால் பேச முடியவில்லை. பில்லி, கீழே சென்று அந்த ஜெப அட்டை அவளிடம் எண் இரண்டு ஜெப அட்டை இருக்கிறதா என்று சரி பாருங்கள். ஆமாம் [யாரோ ஒருவர் “ஆமாம்” என்று கூறுகிறார் Ed] எண் இரண்டு சரி. எண் ஒன்று, இரண்டு சரி. ஆமாம் சரி, இப்பொழுது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. அங்கே இரண்டு அல்லது மூன்று காணாமல் போய் உள்ளது. நீங்கள் விரும்பினால் ஒன்று முதல் பதினைந்து வரையிலும். 207. நல்லது, இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருங்கள். பாருங்கள். உண்மையான பயபக்தியுடன் இருங்கள், ஜெபியுங்கள் “நான் தேவனை விசுவாசிக்கிறேன், நான் ஜெபிக்கப் போகிறேன், நான் ஜெபிக்கப் போகிறேன், உங்களில் எத்தனை பேர் ஜெபிக்கப் போகிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 208. இங்கு எத்தனை பேர் ஜெப அட்டை இல்லாமல் இருக்கிறீர்கள். தேவன் உங்களை குணமாக்குவார் என்று உங்களுக்குத் தெரியும், உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். தேவன் உங்களை குணப்படுத்துவார் என்று ஒவ்வொருவரும் விசுவாசியுங்கள். சரி, எல்லா இடங்களிலும் உள்ள ஒவ்வொருவரும் விசுவாசியுங்கள். விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், சந்தேகம் கொள்ளாமல் உங்கள் முழு இருதயத்துடன் தேவனை விசுவாசியுங்கள். சரி.. வாருங்கள். 209. இது ஒரு வகையில் ஒவ்வொருவரையும், அவசரம் கொள்ளவும் எளிதில் உணர்ச்சி வசப்படவும் செய்கிறது. எனவே கர்த்தருடைய ஆவியானவர் எப்பொழுதும் அதை விரும்புகிறதில்லை பாருங்கள்? அமைதியாக இருப்போமாக, பாருங்கள், உங்களை நீங்களே அமைதிப்படுத்திக் கொண்டு, 'கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன், நான் உம்மை நேசிக்கிறேன். மேலும் என்னுடைய வேண்டுதல்களை நீர் அருளுவீர் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்று மட்டும் கூறுங்கள். அவ்வளவு தான். இப்பொழுது நான் சொல்வதை நன்றாக கேட்க முடிகிறதா? நான் இங்கேயே நின்று கொள்கிறேன். 210. இங்கே ஒரு பெண்மணி இருக்கிறாள். இங்கே இது மீண்டுமாக ஒரு அழகான வேதாகமத்தில் உள்ள காட்சியாக இருக்கிறது. இங்கு இருக்கின்ற பெண்மணி ஒரு கருப்பின பெண்மணியாக இருக்கிறாள். நான் ஒரு வெள்ளைக்கார மனிதனாக இருக்கிறேன். நிச்சயமாகவே இது ஒரு அழகான வேதாமகக் காட்சியை அந்நியர்களாகிய உங்களுக்கு மீண்டும் கொண்டு வருவதாக இருக்கிறது. 211. இயேசு அந்த ஸ்தீரியை கிணற்றின் அருகே சந்தித்தார். அவள் ஒரு சமாரிய ஸ்திரீயாக இருந்தாள். அவர் ஒரு யூதனாக இருந்தார், அவர்கள் உரையாடத் துவங்கினார் "குடிப்பதற்கு தா” என்று அவர் கூறினார். அவளுடன் இப்படியாக பேச்சு தொடர்கிறது, மேலும் அவள் அவளிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார். ஆனால் முதலில் அவர் அவளிடம் குடிப்பதற்கு தா என்று கேட்டார். மேலும் அவளால் அதை கொடுக்க முடியவில்லை, காரணம், அவள் மற்றொரு இனத்தைச் சார்ந்தவளாக இருந்தாள். ஆகவே அவர் அதை அறிந்து அங்கே இன வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதை உடனே அவள் அறிந்து கொள்ளும்படி செய்தார். 212. மேலும் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு இன்றிரவு இங்கே நாம் இருக்கிறோம். இப்பொழுது இயேசு கிறிஸ்து 12-ம் வசனத்தில் அவர் செய்ததை அவரை விசுவாசிக்கிறவனும் செய்வான் என்று வாக்குப் பண்ணியுள்ளார். அது சரியா, அதை நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? ஏன்? அவர் வார்த்தையாக இருந்தார் அது சரிதானே? மேலும் அவர் “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் இருந்தால், நீங்கள் எதைக் கேட்பீர்களோ” என்று கூறியுள்ளார். இப்பொழுது ஒரு ஸ்திரீயானவள் சுகவீனமுள்ளவளாக இருந்தால், நான் அவளை குணமாக்க முடியாது, யாராலும் அவளைக் குணமாக்க முடியாது, தேவன் அதை ஏற்கனவே அதைச் செய்து முடித்து விட்டார். அவள் ஒரு பாவியாக இருந்தால், நான் அவளை இரட்சிக்க முடியாது. தேவன் ஏற்கனவெ அதைச் செய்து விட்டார். அவள் அதை விசுவாசிக்க மட்டுமே செய்ய வேண்டும். 213. ஆனால் இப்பொழுது இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருந்து இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய உயிர்த்தெழுதலுக்கு ஒரு நித்திய அடையாளத்தை தருவாரென்றால் நான் அவருடைய ஊழியக்காரனாக இந்த நோக்கத்திற்காக அழைக்கப்பட்டிருந்தால் அவர் என் மூலமாகப் பேசுவார். இப்பொழுது எல்லா ஊழியக்காரர்களும் அதைச் செய்வதற்காக அழைக்கப் படவில்லை, பாருங்கள் ஆனால் ஒரு சந்ததியில் ஒருவர் என்று அவர்களுக்கு இருந்தது. தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பதை உங்கள் ஊழியங்களின் மூலம் மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பதாக அது இருக்கிறது. 214. பாருங்கள் அவர் மற்ற காரியங்களையும் செய்து கொண்டு வருகிறார். நான் அந்நிய பாஷையில் பேசியிருக்கிறேன். அதை நான் எல்லா நேரங்களிலும் செய்வதில்லை. என் வாழ்க்கையில் மூன்று முறை அல்லது நான்கு முறை அதைச் செய்திருக்கிறேன் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்கே தெரியாது. நான் பேசுவதை நானே கேட்க வேண்டும் என்று ஒரு நாள் நினைத்தேன், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்க திரும்பினேன். யாரோ ஜெர்மன் மொழியில் பேசுவதைப் போல சத்தம் கேட்டது. அது எங்கே இருந்து வருகிறது என்று கவனித்துப் பார்த்தேன். அதைச் செய்து கொண்டி ருந்தது நானே தான் பாருங்கள்? ஆகவே நான் ஒரு சேனைக்குள் புகுந்து அதன் வழியாக ஓடிச் சென்று ஒரு சுவரை தாண்டுவதைப் போல நினைத்தேன். ஆனால் அது நானாக இருந்ததை கண்டு பிடித்தேன், அவர் முடிக்கும் வரையிலும் தொடர்ந்து அமைதியாக இருந்தேன், அது பரிசுத்த ஆவியானவர் ஒரு ஸ்திரீக்காக பரிந்து பேசிக் கொண்டிருந்தார். அது மிக மிக மோசமான காசநோய் (TB), என்று பின்னால் தெரிய வந்தது. தேவன் அவளை குணப்படுத்தினார். 215. ஆனால் இப்பொழுது, இங்கே இருக்கின்ற பார்வை யாளர்களுக்கு கூட்டத்தில் இந்தப் பெண்மணி அந்நிய பெண்ணாக இருக்கிறாள். அவள் ஒரு கருப்பின பெண்மணியாக இருக்கிறாள்; மேலும் எப்படி இருப்பினும் அவள் என் வயதில் இருந்தாள், ஆனால் நான் அவளை ஒரு போதும் பார்த்தது கிடையாது. அவள் வெறும் பெண்ணாக இருக்கிறாள் இப்பொழுது ஏதோ சில காரணத்திற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறாள் எனக்குத் தெரியாது. நான் உங்களிடம் கூற முடியாது. பரிசுத்த ஆவியானவர் அவளுடைய தொல்லை என்ன என்றும் அவள் எதற்காக இங்கே இருக்கிறாள் என்றும் அவள் என்ன விரும்புகிறாள் என்றும் அல்லது அவள் என்ன செய்தாள் என்றும் அவள் என்ன செய்ய வேண்டும் என்றும் இதைப் போல ஏதோ காரியத்தை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால் அன்றி அவளைக் குறித்த எந்த ஒன்றும் எனக்குத் தெரியாது. அதன் பிறகு, அது சரியாக இருக்கிறதா என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று ஒவ்வொருவரையும் அது திருப்திபடுத்துகிறதாக இருக்கும். அல்லவா? 216. நாம் ஒருவருக்கொருவர் ஒரு கணம் பேசிக் கொள்வோம். காரணம் பரிசுத்த ஆவியானவர் இலேசான இதயம் கொண்டவராக இருக்கிறார். அந்த கிணற்றருகே இருந்த பெண்ணிடம் நமது கர்த்தர் செய்ததைப் போலவே நான் சற்று உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். 217. இப்பொழுது, பாருங்கள் அது நானாக இருக்கமுடியாது, காரணம் உங்களை எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் பாருங்கள், நான் ஒரு சரீரத்தில் இருக்கிறேன், நீங்கள் ஒரு சரீரத்தில் இருக்கிறீர்கள்; ஆனால் உங்களுக்கு உள்ளாக ஒரு ஆவியையும், ஒரு ஆத்துமாவையும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள், எனக்குள் ஒரு ஆவி, ஒரு ஆத்துமா இருக்கிறது. அதன் பிறகு எனக்குள் இருக்கும் இந்த ஆவி கிறிஸ்துவின் ஆவியை கொண்டிருக்குமானால் பாருங்கள் நான் பிறந்ததிலிருந்து அது ஒரு வரமாக இருந்து வருகிறது. 218. நீங்கள் தூங்கச் சென்று எதையாவது கனவு காண்பது போல நீங்கள் கனவு காண்பீர்கள், இப்பொழுது பாருங்கள் இந்த ஐந்து புலன்களும் செயலற்றதாக மாறி விடுகிறது, பிறகு முழுவதுமாக நீங்கள் ஒரு கனவுலகில் இருந்து கொண்டிருப்பீர்கள், அதன் பிறகு இந்த ஐந்து புலன்களும் செயல்படத் துவங்கும் போது நீங்கள் விழித்த நிலையில் இருக்கிறீர்கள். பாருங்கள், உங்கள் ஆழ்மனம் உங்களுடைய முதலாவது உணர்விலிருந்து வெளியில் வெகு தொலைவில் இருந்து கொண்டிருக்கும். 219. ஆனால் அவைகள் இரண்டும் சரியாக ஒன்றாக இணைந்திருக்கும் போது நீங்கள் தூங்கச் செல்வதில்லை; நீங்கள் அதில் அப்படியே மாறிவிடுகிறீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் இன்னுமாக உங்கள் ஐந்து புலன்களில் தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அது ஒரு வரமாக இருக்கிறது, அது கிறிஸ்துவானவர் இன்னும் அதே போல இருக்கிறார் என்பதற்கான ஒரு நிரூபணமாக இருக்கிறது. 220. நாம் வார்த்தையில் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை உடை யவர்களாக இருக்கிறோம். நமக்கு ஓரல் இராபர்ட்ஸ் போன்ற வித்தியாசமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலையின் மீது கைகளை வைத்து குலுக்குவார்கள், பிறகு "தேவனைத் துதியுங்கள், அதை உடனே பெற்றுக் கொள்வீர்கள் என்று கூறுவார்கள். பாருங்கள், அத்துடன் அவர்களில் ஒருவர் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார், அவர் தேவனுடைய மனிதனாக இருக்கிறார். பாருங்கள், அப்படிச் செய்யாத மற்றொரு வகையினர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் வேறு ஏதாவது காரியங்களை செய்கிறார்கள். இவைகள் எல்லாம் ஆவியின் வரங்களாக இருக்கிறது; அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் மேய்ப்பர்கள் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்? இல்லையா? 221. அதைச் செய்ய தேவன் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“அது எனக்குத் தெரியும்” என்று அந்த சகோதரி கூறுகிறாள்]. நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு நன்றி சகோதரியே. ஆம் ஐயா. நான் ஏன் உங்களை 'சகோதரி' என்று அழைத்தேன்? ஏனென்றால் நீங்கள் அதை செய்த போது, அது சரி என்று ஆவியும் கூறியதை உணர்ந்தேன். 222. நீங்கள் இங்கு இருந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன், ஜனங்கள் இப்பொழுது வரையிலும் நான் கூறுவதை கேட்கின்றனர். அந்த ஸ்திரீயானவள் தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள், அவளால் தூங்க முடியவில்லை. அது சரியே. நீங்கள் மிகவும் சுகவீனமாக இருக்கிறீர்கள், உங்களால் சாப்பிடவும் முடியவில்லை. அது பித்தப்பை கற்களாக இருக்கிறது. ஆகவே நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது சரி. அது முற்றிலும் சரியாக இருக்கிறது. நீங்கள் கூறுவது சரிதான் சுகவீனம், குமட்டல் உணர்வு இருக்கிறது. அது சரி. அதன் பிறகு நீங்கள்... 223. உங்களுக்கு இன்னும் யாரோ ஒருவருக்காக ஆர்வம் கொண்டவராக இருக்கிறீர்கள். அது உங்களுடைய கணவனாக இருக்கிறார். மேலும் அவருக்கு ஒருவிதமான பதட்டம் இருக்கிறது, மனதளவில் ஒரு வகையான பதட்டத்துடன் இருக்கிறார். அவருக்குள் சில தொல்லைகள் இருக்கிறது. அவர் ஏதோ ஒன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார், அது ஏதோ ஒரு வணிக ஒப்பந்தம் அல்லது ஒய்வூதியத்தை பெற முயற்சிக்கும் ஒன்றாக இருக்கிறது. அது சரி. அவர் ஓய்வூதியம் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் ஆம் ஐயா. அதன் பிறகு அங்கே.... 224. ஒரு பனிரெண்டு வயது பையனை காண்கிறேன். அவன் சற்று சிறியவனாக இருக்கிறான். மேலும் உண்மையில் அவன் உங்களுடைய பையன் அல்ல. அவன் நீங்கள் வளர்த்த பிள்ளையாக இருக்கிறான். அவனுக்குள் ஏதோ தவறான காரியம் இருப்பதாக நீங்கள் நினைப்பதைப் போல தெரிகிறது. அவன் அப்படி இருக்கவில்லை. அவன் ஒரு சிறிய பையனாகத்தான் இருக்கிறான். அவன் சரியாக இருப்பான். நிச்சயமாக அது சரியாக இருக்கிறது. சரியானவை களையே நம்புங்கள் ஒவ்வொரு காரியமும் சரியாக நடக்கும். சென்று அதை விசுவாசியுங்கள். சகோதரியே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 225. இன்னொரு விஷயம், நீ யார் என்று தேவன் என்னிடம் கூற முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? தேவன் என்னிடம் இந்த பெண்மணி யார் என்று கூற முடியும் என்று நினைக்கிறாயா? திருமதி. ரெட் (Mrs. Red) அதுவேதான் அது சரி. 226. சிறிய மகனே, பரவாயில்லை, நீ உன் அத்தை சொல்வதை கேள். ஏதோ நடந்து விட்டது என்று அவள் நினைத்தாள், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நீ சற்று சிறுவனாக இருக்கிறாய். நீ அப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. முன்னேறிச் செல், நீ நன்றாக இருப்பாய். ஆமென். 227. எப்படி பரிசுத்த ஆவியானவர் தனக்கேற்ற வழியில் அதை மாற்ற விரும்புகிறார்? பாருங்கள்? 228. எப்படி இருக்கறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய தொல்லை என்ன என்று என்னிடம் கூறுவாரென்றால் அதன் பிறகு நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? நீங்கள் செய்வீர்களா? [அந்த சகோதரி "நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறாள்) நீங்கள் விசுவாசியுங்கள் அவ்வளவுதான். நீங்கள் பதட்டமான நிலையில் இருக்கறீர்கள். உங்கள் தலைக்குள் ஒரு பலத்த சத்தம் இருந்து கொண்டிருக்கிறது. “ஓ ஓ என்று எல்லா நேரங்களிலும் சென்று கொண்டிருக்கிறது. அது சரியே. பிறகு உங்களுக்கு ஏதேனும் சதை வளர்ச்சி இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்தனர், உங்கள் மலக்குடல் பகுதியில் ஒரு சதை வளர்ச்சியை கண்டுபிடித்தனர். இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்துடனும் அதை விசுவாசிக்கிறாயா? (“ஆமாம்”] அது சரியே. விசுவாசித்து உங்கள் வழியில் செல்லுங்கள் நீங்கள் குணமடைவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. பார்த்தீர்களா?.... 229. உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரி, ("விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறார்கள்] விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், சந்தேகம் கொள்ளாதீர்கள், நேற்றும், இன்றும், என்றும் மாறாத அந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். உங்கள் இளைய மகளுக்காக வந்திருக்கிறீர்களா இல்லை, இரண்டு பேர், உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருமே ஒருவித பதட்டத்துடன் இருக்கின்றனர் அது சரிதான். தேவனாகிய கர்த்தாவே இந்த குழந்தைகளின் மேல் கருணை காட்டுவீராக. நான் அவருடைய வார்த்தையை பேசினால் அவர்கள் அதிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள் என்று விசுவா சிக்கிறீர்களா? ("நான் அதை அறிந்திருக்கிறேன்") ஆகவே சென்று அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். "நீ விசுவாசித்தால், எல்லாம் கைகூடும்” 230. நீங்கள் உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் இதில் விசுவாசம் வைத்திருக்கிறீர்களா? இந்த சிறிய குழந்தையின் குரல்வளையில் இருக்கும் அந்த தொல்லை சரியாகி விடும் என்று விசுவாசிக்கிறீர்களா? சரி, உங்களால் முடியும். அந்த ஸ்திரீயின் மேல் இங்கேயும், முதுகுப்புறமாகவும், பிறகு இங்கேயுமாக ஒளிர்வதை நான் பார்க்கிறேன். “அது என்னவாக இருக்கும்” என்று நான் நினைத்தேன். அவளுடைய குழந்தைக்காக அங்கே அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தனர் எல்லாம் சரியாகி விடும் அது போய்விடும், அது சரியாகிவிடும். சந்தேகம் கொள்ள வேண்டாம். 231. நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? நேற்றும் இன்றும் என்றும் மாறாத அந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு உங்களுடைய தொல்லை என்னவென்று எனக்கு வெளிப்படுத்துவாரென்றால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் பதட்டமான நிலையில் இருக்கிறீர்கள், நிச்சயமாகவே உங்கள் வயதில் உள்ள ஒரு ஸ்திரீக்கு வரும் இடர்பாடுகள் ஆனால் இங்கே இன்னுமாக ஒரு பெரிய காரியம் இருக்கிறது என்று தேவன் என்னிடம் கூற முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அது உங்கள் இடதுபுற மார்பில் இருக்கிறது. அது சரிதானே? எல்லாம் சரியாகி விட்டது சென்று அதை விசுவாசியுங்கள். அது உங்களை விட்டுப் போய்விடும் சந்தேகம் கொள்ளாமல் தேவனை விசுவாசியுங்கள். 232. நான் ஆசீர்வதிக்கப்பட்ட சில காரியங்கைளப் பார்த்தேன், மேலும் பயங்கரமான சில காரியங்களையும் பார்த்தேன் "பலியிடுவதைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” அடுத்தது (என்ன) "ஆட்டுக் கடாக்களின் கொழுப்பை விட செவி கொடுப்பது நலம்" அது சரியா? கர்த்தராகிய இயேசுவே, இரக்கமாயிரும். நான், ஓ,..நான்! கீழ்ப்படிதல், நேர்மை, உத்தமம்; எப்படி கர்த்தராகிய இயேசு அதை எப்படி செய்தார் என்று ஒரு நிமிடத்தில் நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். 233. அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற மஞ்சள் நிற ஆடை அணிந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் சகோதரியே, உங்களை தேவன் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? சரி எல்லாம் அவ்வளவுதான் சரி, நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அவிசுவாசம் கொள்ள வேண்டாம். 234. இரண்டாவது வரிசைக்கு பின்னால் அங்கே உட்கார்ந்து இருக்கும் அந்த பெண்மணிக்கு தொண்டையில் தொல்லை இருக்கிறது. அந்த பெண்மணி இங்கே என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? செய்வீர்களா? ஆம். நீ எழுந்திருந்து யாரோ இடம் கொடுத்தாய். இன்னும் ஐந்து ஒருவருக்கு நிமிடங்களில் நீ குணமாக்கப்பட்டிருப்பாய், அவர் அதை தவறவிட்டுவிட்டார். ஆனால் நீ அதைப் பெற்றுக் கொண்டாய். இப்பொழுது உன்னுடைய வேண்டுகோளை பெற்று கொண்டாய் அது உன்னை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. 235. தேவன் உன்னை குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறாயா? [அந்த சகோதரி “ஆம் ஐயா” என்கிறார்கள்] உன்னிடம் என்ன தொல்லை இருக்கிறது என்று தேவன் என்னிடம் கூற முடியும் என்று விசுவாசிக்கிறாயா [“ஆம்”] உனக்கு நீரழிவு நோய் இருக்கிறது. உன்னுடைய கணவரிடமும் கூட அது இருக்கிறது. அவருக்கு அப்படி இல்லையா? (“ஆம் ஐயா') அது சரியே. செல்லுங்கள், நீங்கள் இருவரும் நன்றாக நலமுடன் இருங்கள், உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள். 236. ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி. தேவன் உங்களை குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் கடந்து போகும்படி நான் உங்கள் மேல் கரங்களை வைக்கட்டும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் அவள் குணமடைவாளாக. அதை அருளுவீராக. 237. மூட்டுவலி தேவன் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? (“அந்த சகோதரி “ஆம் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறார்கள்] நீங்கள் போகலாம், “கர்த்தாவே உமக்கு நன்றி, தேவனே நான் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். ஆம் ஐயா. 238. நான்! நரம்புத்தளர்ச்சி, மூட்டுவலி, வயிற்றுவலி. உங்கள் இருதயத்தில் விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். “கர்த்தாவே என்னை குணமாக்கியதற்கு உமக்கு நன்றி” என்று மட்டும் கூறுங்கள், சென்று கொண்டிருங்கள். 239. அந்த இரத்தத்தில் தான் நம்முடைய ஜீவன் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும், அப்படி இல்லையா? ஆனால் தேவன் எந்தக் காரியத்தையும் குணமாக்கமுடியும் (நீ அதை விசுவாசிக்கிறாயா) இரத்தமானது, எந்தக் காரியத்தையும் சரி அது முடிந்தது. உங்கள் முழு இருதயத்துடனும் “கர்த்தாவே உமக்கு நன்றி” என்று கூறுங்கள் செல்லுங்கள். 240. நான் உங்கள் தலையின் மீது கரங்களை வைத்து “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று கூறினால் நீங்கள் குணமாக்கப் படுவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? இப்படி வாருங்கள், பாருங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் தேவன் அவரை சுகமாக்குகிறார். விசுவாசமுள்ளவர்களாக இருங்கள். 241. இதுவரையில் இவ்வளவு அதிகமான ஜனங்களை ஒரு போதும் பார்த்ததில்லை. இந்த பெண்மணி மூட்டுவலியினாலும் கூடவே பலவித சிக்கலான காரியங்களுடனும் இருந்து கொண்டிருக்கிறாள். ஆமாம் அது சரியே. தேவன் உன்னை நலமுறச் செய்வார் என்று விசுவாசிக்கிறாயா? எல்லாம் சரி. “கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி” என்று கூறுங்கள், செல்லுங்கள். 242. இப்பொழுது எத்தனை பேர் விசுவாசிக்க விரும்புகிறீர்கள்? “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, ஆனால் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" 243. தேவனுடைய வாயின் வார்த்தைகளை எத்தனை பேர் விசுவாசிக்கறீர்கள்? இயேசு கிறிஸ்து மாம்சத்தில் இருந்த தேவனாக இருக்கிறார். நமக்கு அது தெரியும். அதைக் குறித்து விவாதம் இல்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இல்லை; அவர் தேவனாகவும் இருந்தார். தேவன் மாம்சத்தில் தன்னை வெளிப்டுத்தினார். அவர் பூமியை விட்டுச் செல்லும் போது வேதாகமத்தின்படி அவர் கூறின கடைசி வார்த்தை "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து ஜெபிப்பார்கள் அவர்கள் சொஸ்தம் அடைவார்கள்" உங்கள் முழு இருதயத்துடனும் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பெபழுது எத்தனை விசுவாசிகள் இங்கே இருக்கின்றனர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி. 244. நான் சில காரியங்களைச் செய்ய விரும்புகிறேன் எத்தனை பேர் தங்கள் தப்பிதங்களுக்காக ஜெபம் ஏறெடுக்க விரும்புகிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் கவனியுங்கள். இப்பொழுது இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் விசுவாசத்தை சோதனை செய்து பாருங்கள். நான் என்னுடைய விசுவாசத்தை பயன்படுத்துகிறேன். ஆகவே நாம் ஒரு ஒற்றுமையை [அது காலதாமதமாக இருக்கிறது] அதன் பிறகு உன் மீது கரம் வைக்கப்பட்டுள்ள நபருக்காக நீ ஜெயிப்பாயா? ஏனென்றால் அவர்கள் உனக்கு ஜெபம் செய்யப் போய்க் கொண்டிருக்கின்றனர் நீங்கள் பாருங்கள். 245.இங்கே யாரோ ஒருவர் அவர்களுடைய கரங்களை என் மீது வைத்திருந்தனர், நான் என் கரங்களை அவர்கள் மீது வைத்திருந்தேன். “கர்த்தாவே, நான் ஒரு விசுவாசியாக இருக்கிறேன். இந்தப் பெண்மணி, இந்த அருமையான மனிதன், இந்தப் பையன், சிறுமி யாராக இருந்தாலும் அவர்கள் துன்பப்படுகிறார்கள். தயவு கூர்ந்து அன்பின் தேவனே. நானும் கஷ்டப்படுகிறேன், அவர்கள் இதன் வழியாக சென்று கொண்டிருக்கின்றனர் என்று எனக்குத் தெரியும். அன்பின் தேவனே. அவர்களை குணமாக்குவீராக. 246. இப்பொழுது மிகவும் ஆழ்ந்த உத்தமத்துடன் இருங்கள், ஆழ்ந்த உத்தமத்துடன், மேலும் அவர்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் விதத்தில் ஜெபியுங்கள். பாருங்கள்? மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் கைகளை வைத்திருக்கிற நபருக்காக ஜெபிக்கிறீர்கள், இயேசு உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதைப் போல. பாருங்கள், என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள், தேவனுடைய வார்த்தை தவற முடியாது. அது சரியா? அது சத்தியமாக இருக்கிறது. அது, அது தவறிப் போகவே முடியாது. 247. இப்பொழுது முதலாவதாக நாம் ஒரு காரியத்தை செய்வோம், நம்மிடம் உள்ள எல்லா அவிசுவாசத்தை குறித்து, நம் பாவங்களையும் அறிக்கை செய்வோமாக, நாம் செய்த தவறுகள் அனைத்தையும் அறிக்கை செய்வோம். “கர்த்தராகிய இயேசுவே, என்னை மன்னியுங்கள்” என்று கூறுவோமாக. இங்கே இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறதான, இயேசு கிறிஸ்து மகிமைப் படுத்திக் கொண்டிருக்கிறதான இந்தக் கூட்டத்தில் நான் உண்மை யாக இருக்க விரும்புகிறேன். இப்பொழுது நான் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற இந்த வேளையில், எல்லாவற்றையும் அறிக்கையிட மட்டும் செய்யுங்கள். “கர்த்தாவே, எனக்கு அநேக சந்தேகங்கள் இருந்தன, ஆனால் இன்றிரவு உமது சமூகத்தில் நான் நின்று கொண்டு, நீர் இல்லாமல் எந்த ஒரு காரியமும் சாத்தியமில்லை என்பதை பார்க்கிறேன் வேறு யாரும் அதை செய்ய முடியாது" என்று கூறுங்கள். 248. நீங்கள் அதை பிசாசின் ஆவி என்று அழைக்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். காரணம். அது மன்னிக்க முடியாததாக இருக்கிறது, பாருங்கள் பரிசுத்த ஆவியானவர் வந்து அதைச் செய்யும் போது அதன் பிறகு அதை பிசாசின் ஆவி என்று அழைக்கும் போது அது மன்னிக்கவே முடியாது" என்று இயேசு வேதாகமத்தில் கூறியிருக்கிறார். பார்த்தீர்களா? 249. அப்படியானால் நீங்கள் “நான் இப்பொழுது இங்கே நின்று கொண்டிருக்கிறேன்”அதை அறிந்து கொண்டவனாக இங்கே அமர்ந்திருக்கிறேன்” எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். ஏன் உங்களால் இவற்றைச் செய்ய முடியவில்லை. மேலும் இப்பொழுது, நம்முடைய சகோதார் பிரான்காம் அவர்கள் உம்முடைய வார்த்தை உண்மை என்பதில் அவர் விசுவாசம் உடையவராக இருக்கிறார். அவர் ஒரு வரத்தை உடையவராக இருக்கிறார். நானும் ஒரு வரத்தை உடையவனாக இருக்கிறேன். எனக்குள் அந்த வரமானது ஆவியின் சுகமளிக்கும் வரமாக இருக்கிறது. நான் இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கும் வியாதியுள்ள என் நண்பர்கள் சுகமாகும்படி கேட்கிறேன். மேலும் அவர்களும் எனக்காக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது என்னுடைய பாவங்களை மன்னீப்பிராக. மேலும் கர்த்தராகிய இயேசுவே, நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னீப்பீராக. அதை எனக்கு வெளிப்படுத்துவீராக; கர்த்தாவே, நான் சென்று அதை சரி செய்து கொள்வேன். நீர் மட்டும் எனக்கு அதை வெளிப்படுத்தி எனக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று காட்டுவீராக. 250. மேலும் இந்த பார்வையாளர்களுக்காக இரக்கம் கருணை காட்ட ஜெபிக்கிறேன். அதை அருள்வீராக. கர்த்தாவே வியாதியாய் உள்ளவர்கள் துயரப்படுகிறவர்கள் மேல் கருணை காட்டுவீராக. ஜனங்கள் இங்கே ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் விசுவாசிக்கின்றனர். நீர் இங்கிருப்பதை அவர்கள் பார்த்தனர். தேவனே நானும் உம்மை பார்த்தேன், நாங்கள் அனைவரும் ஜீவனுள்ள தேவனுடைய அந்த ஆதாரங்களை கண்டோம். 251. கர்த்தாவே, நாங்கள் வெகுவாக மறந்து விட்டோம். அந்த மறுபக்கத்திற்கு, கலப்புச் செய்யப்பட்ட அந்த பகுதிக்கு, ஸ்தாப னங்கள், கோட்பாடுகள், மேலும் பெரிய ஸ்தாபன சபைகள், மிகக் கடினமான அந்த பராமரிப்பு அமைப்புக்குள் சென்று விட்டோம். (உணவு, உடை, பாதுகாப்பு) கர்த்தாவே, நீர் எவ்வளவு அதிகமாக செய்ததைக் கண்டிருந்தும், இன்னுமாக எங்களையே கடினமாக்கிக் கொண்டு ஏறக்குறைய உம்மை விட்டு அகன்று சென்று விட்ட பெந்தெகொஸ்தேயினராக நாங்கள் இருக்கிறோம். இது பரிதாபகாரமானதாக இருக்கிறது. பிதாவே, இந்த காரியத்தை எங்களுக்கு மன்னிப்பீராக. இது மிகவும் அதிகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கர்த்தாவே நாங்கள் ஆசீர்வாதங்களை மறந்து விட்டோம். எங்களை மன்னிப்பீராக மேலும் எங்களுக்கு உதவி செய்வீராக. கர்த்தாவே நீர் அதைச் செய்வீரா? 252. இப்பொழுது, இரக்கமாயிரும், மேலும் இங்கு இருக்கின்ற அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே இங்குள்ள ஒவ்வொரு விசுவாசிகளையும் பொறுப்பெடுத்துக் கொள்வாராக, ஆகவே இப்பொழுது உம்முடைய ஊழியக்காரனாகிய நான் வியாதியாக உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஜெபிக்கிறேன். கர்த்தாவே வியாதியஸ்தர் மேல் வைக்கப்பட்டிருக்கும் கரங்களை பொறுப் பெடுத்துக் கொள்ளும்படியாக நான் உம்மிடம் கேட்கிறேன். கர்த்தாவே, பரிசுத்த ஆவியின் வல்லமை இங்குள்ள ஒவ்வொரு மனிதனின் மீதும் பெண்களின் மீதும், சிறுமிகள், சிறுவர்கள் இங்கு ஒன்றாக கூடிவந்திருக்கும் அனைவர் மீது இருப்பதாக ஜனங்கள் இங்கே வியாதியுடன் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். கர்த்தாவே, அவர்கள்... அவர்கள் ஆரோக்கியத்துடன் வெளியே செல்வார்களாக. அவர்கள் நாளை இரவு நல்ல ஆரோக்கியத்துடன் வருவார்களாக. கர்த்தாவே, இதை அருள்வீராக. தயவு செய்து செய்வீராக. என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும், அதை நீர் செய்வீர் என்று நான் முழு இருதயத்துடன் ஜெபிக்கிறேன். ஒவ்வொன்றையும் அறிக்கை செய்கிறேன், மேலும் இப்பொழுது எங்களுக்கு உதவி செய்வீராக. பரிசுத்த ஆவியானவர் தாமே பொறுப்பெடுத்துக் கொள்வராக. மேலும் இந்த ஜனங்கள் ஒருவர் மற்றொருவர் மீது கைகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் இப்பொழுதே குணமடையட்டும். இயேசுவின் நாமத்தினாலே அதை அருளுவீராக. 253. இப்பொழுது சாத்தானே, இயேசுவின் நாமத்தில் உன்னை குற்றப்படுத்துகிறேன், இரத்தமானது எல்லாவற்றிற்கும் போதுமா னதாக இருக்கிறது; அந்த இரத்த்தில் உள்ள ஜீவனானது அதன் வழியாக வந்து இப்பொழுது நம்முடைய நிலையில் இருந்து, கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். நாம் ஒரு சமயம் சந்தேகம் கொள்பவர்களாக இருந்தோம், இப்பொழுதோ விசுவாசிகளாக இருந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய பாவங்கள் அந்த இரத்தத்தின் கீழாக இருக்கிறது. 254. "தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறவன் மன்னிப்பை பெறுவான்” நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டோம். ஆகவே நாம் மன்னிக்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுது நம்முடைய பாவங்கள் கடலின் ஆழத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளது இனிமேல் நம்மிடம் பாவம் உண்டு என்று குற்றம் சுமத்த இயலாது நாம் அதை அறிக்கை செய்து விட்டோம். நாம் சரியானவைகளை செய்கிறோம். ஆகவே இப்பொழுது, தேவனுக்கும் நமக்கும் இடையில் இருந்த பெரிய பிளவானது அகற்றப்பட்டு விட்டது. தேவன் அந்த பாவத்தை மறதியின் கடலில் போட்டுவிட்டார். அவர் இனி ஒருபோதும் நம்மை பாவிகள் என்று நினைவில் கூட கொள்ள முடியாது. நாம் இனி மேலும் பாவிகள் அல்ல. நாம் குமாரர்களும், குமாரத்திகளுமாக இருக்கிறோம், ஆகவே இப்பொழுது நாம் சரீர விடுதலைக்காக இங்கே இருந்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் விசுவாசிகளாக இருக்கிறோம், கிறிஸ்து நமக்காக விட்டுச் சென்ற வார்த்தை, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சொஸ்தமடைவார்கள்” என்று இருக்கிறது. ஆகவே இதைத்தான் நாம் செய்து வருகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், விசுவாசத்தின் மூலம் அதை நாம் செய்து வருகிறோம். 255. இப்பொழுது இங்கே இருக்கின்ற ஒவ்வொருவரும் அருகில் இருக்கும் யார் மீதாவது உங்கள் கரங்களை வையுங்கள். உங்கள் அருகில் இருக்கும் யார் மீதாவது கைகளை வைத்து; 256. “சாத்தானே நான் உன் மீது குற்றம் சாட்டுகிறேன், சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினல் நான் உன் மீது குற்றம் சுமத்துகிறேன், என்னுடைய சகோதரனை கட்டவிழ்த்து விடு இங்கிருந்து வெளியே போ. நீ வெளியே போ. நீ தோற்கடிக்கப்பட்டாய். அவரைப் போற்றவும், துதிக்கும்படியாகவும் இயேசு கிறிஸ்து இப்பொழுது என்னை சுகமாக்குகிறார்" நான் முழுமனதுடன் விசுவாசிக்கிறேன் என்று கூறுங்கள். 257. அதை உங்கள் முழு இருதயத்துடனும், உங்கள் முழு ஆத்துமாவுடனும், உங்கள் முழு மனதுடனும் விசுவாசியுங்கள், மேலும் எல்லாம் வல்ல தேவன் அதை அருள் செய்வீராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.